'நிறைய ரத்தம் சேதாரமாயிருக்கு. nரியஸ் கேஸ்தான். நீ யார்?' என்று கேட்டுவிட்டு, உனக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்?' என்பதுபோல் பார்த்தார். "அவளுக்குத் தெரிஞ்சவன். நான் ரத்தம் தரலாமா?!' என்று கேட்டான். மூர்த்தியின் ரத்தத்தைப் பரிசோதித்தார்கள். பொருந்து கிறது என்று தெரிந்ததும் ஏராளமான ரத்தத்தை அவனிடம் உறிஞ்சிக்கொண்டார்கள். ஆறுமணி வரை காத்திருந்து மஞ்சு கண் விழித்துப் பார்த்த பிறகே மூர்த்தி கலியான வீட்டுக்குத் திரும்பினான். g இருட்டாகிவிடவே கலியாண வீட்டுப் பந்தலில் காஸ்லைட் எரிந்து கொண்டிருந்தது. உடலும் உள்ளமும் சோர்ந்து, கண்கள் சிவந்து வாடிய முகத்துடன் காணப்பட்டான். அவனைப் பார்த்ததும் 'ஏதோ கடந்திருக்கிறது' என்பதை ஊகித்துக்கொண்ட கிட்டா என்ன ஆச்சு மூர்த்தி ஏன் இவ்ளோ லேட்? முனு. மணிக்கே வந்துடுவேன்னு பார்த்தேன். உன் விஷயமா மாமாட்ட கூடப் பேசி வெச்சிருக்கேன். அவரும் 'சரி வரட்டும், முகூர்த்த நாளாயிருக்கு. இன்னைக்கே சேர்த்துடலாம்னு சொல்லி பாடசாலை கனபாடிகளைக் கூட இங்க வரச் சொல்லியிருந்தார். கனபாடிகள் இத்தனை நேரம் உனக்காகக் காத்துண்டிருந்தார்' என்றான் கிட்டா, - 'மாமா எங்க போயிருக்கார்?' 'மாடில சீட்டாடிண்டிருக்கார்.' 'மஞ்சுக்கு வயத்துல கத்தி பாஞ்சு ஆஸ்பத்திரில படுத்திண்டிருக்கா. இத்தனை நேரமும் அங்கதான் இருந்துட்டு வரேன். 'ரத்தம் கொடுத்தா மஞ்சுவைப் பிழைக்க வெக்கலாம்'னு பெரிய டாக்டர் சொன்னார். என் ரத்தம் பொருத்தமா யிருந்தது. கொடுத்துட்டு ஆறு மணி வரைக்கும் அங்கயே உட்கார்ந்திருந்தேன். அப்புறம்தான் கண் முழிச்சுப் பார்த்தா, என்னைக் கண்டதும் விக்கி விக்கி அழ ஆரம்பிச்சுட்டா. கவலைப்படாதே, கான் கவனிச்சுக்கறேன்’னு ஆறுதல் சொல் 113
பக்கம்:வேத வித்து.pdf/116
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை