பக்கம்:வேத வித்து.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதுவும் பார்க்க வேணாம். உன்னைக் கொண்டு போய் சங்கர கனபாடிகளின் பாடசாலையில் சேர்த்து விடுகிறேன். நீ அவரிடம் வேதம் ஓதி வேத வித்தாய்ப் பிரகாசிக்க வேண்டும் என்பது உன் அம்மாவின் ஆசை. அவள் போன பிறகு எனக்கு வாழ்க்கையே சூன்யமாப் போச்சு. உன்னை சங்கர கனபாடி களிடம் ஒப்படைத்துவிட்டு நான் எங்காவது வடக்கே போய் கங்கைக்கரையில் தங்கி விடுகிறேன், என் அந்திம காலத்துக்கு ஏற்ற இடம் அதுதான்.' - - ஒரு நீர்த்தேக்கத்தின் அருகே அவர்கள் வந்தபோது பொழுது விடிந்து விட்டதால் இருவரும் அங்கேயே ஸ்நானத்தை முடித்துக் கொண்டார்கள். தீட்சிதர் கையோடு கட்டிக்கொண்டு வந்திருந்த தயிர் சாதத்தை அவனிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார். - - அதை அவன் சாப்பிட்டு முடித்ததும் 'இதைப் பார்த்தாயா மூர்த்தி இது உன் அம்மா கழுத்திலிருந்த சங்கிலி. மூணு பவுன், இதை உன் கழுத்திலே போட்டுக் கொள். அவள் ஆசீர்வாதம் உன்னை எப்போதும் தழுவிக் கொண்டிருக்கும். - - பிராம்மண குலத்தில் பிறந்த நீ என்றைக்குமே ஆசார சீலனாக இரு. பிராம்மணியத்திலிருந்து ஒரு போதும் வழுவி விடாதே சங்கர கனபாடிகள்ை நீ ஆசானாக அடைவதற்குப் பெரும் புண்ணியம் செய்திருக்க வ்ேண்டும். அவர் இரண்டு யாகங்கள் செய்தவர். என் பால்ய சிநேகிதர். தக்க பருவத்தில், உனக்கேற்ற பெண்ணை அவரே தேடி உன் . திருமணத்தை முடித்து வைப்பார். உனக்கு இனி மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாமே அவர்தான்.' - - மூன்று வருடங்களுக்கு முன் அப்பர் சொன்ன அந்த வார்த்தைகளில் தோய்ந்திருந்த பாசமும் பரிவும் இப்போது நினைவுக்கு வர மூர்த்தி உணர்ச்சி வசப்பட்ட்ான். அந்தத் தயிர் சாதமும் ஊறுகாயும் இப்போது நெஞ்சில் ருசித்தது. .

  • பிடரியைத் தடவி அங்கே உறுத்திய தங்கச் சங்கிலியைத் தொட்டுப் பார்த்தபோது அம்மாவின் நினைவு தோன்ற பனிக்கும் கண்களில் அந்தச் சங்கிலியை ஒற்றிக்கொண்டான். --

10

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/12&oldid=1281548" இலிருந்து மீள்விக்கப்பட்டது