பக்கம்:வேத வித்து.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதத்தைப் பாதில விட்டுட்டு டு த் தெ ரு வி ல நிக்கறேண் டா, கிட்டு திடீர்னு விளக்கணைஞ்சு இருட்டில தவிக்கற மாதிரி இருக்கு. தோன் உதவி பண்ணனும்'னு கேட்டான். எங்க மாமா கிட்டப்பாவிடம் அழைச்சுண்டு போய் அவனைப்பத்தி சொன்னப்போ அதுக்கென்னடா! நம்ம பாட சாலைலயே சேர்த்துட்டாப் போச்சு. அச்சுத கனபாடிகள் கவனிச்சுக்குவார். கவலைப்படாதேன்னு ரொம்ப சுலபமா பிரச்னையைத் தீர்த்துட்டார். மூர்த்தியைப் பத்தி நிறையவே தெரியும்னு வேற சொன்னார்.' 'அப்படியா அச்சுத கனபாடிகள் பாடசாலைல சேர்ந் திருக்கானா? ரொம்ப சந்தோஷம் அவர் சாஸ்திர சிரோ மணி. பிரகஸ்பதின்னு சொல்லுவா." மகிழ்ச்சியில் திளைத்த கனபாடிகள் கமலாவை அழைத்து 'கேட்டயா கமலா முர்த்தி தஞ்சாவூர் வேத பாடசாலைல சேர்ந்திருக்கானாம். என் வயிற்றில் பால் வார்த்த மாதிரி இருக்கு! பாகீரதிக்குத் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவா. அவளைக் கூப்பிடு இங்கே இன்னைக்கு ஸ்வாமி நைவேத்தியத்துக்கு பால் பாயசம் பண்ணச் சொல்லனும்' என்று மகிழ்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காடினார். 'மூர்த்தியானா உங்ககிட்ட சொல்லிக்காமப் போயிட்டான்! நீங்களோ அவன் மேல உயிரையே வெச்சிருக்கேள்!' என்றான் கிட்டாl t ' இவனுக்கு நீங்கதான் மாதா பிதா குரு தெய்வம் எல்லாம்' என்று சொல்லி மூர்த்தியை அவன் தகப்பனார் என்னிடம் ஒப்படைச்சுட்டுப் போனார். மூர்த்தி காணாமப் போனதும் அவருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம தவிச்சுப் போனேன். தினம் தினம் பகவானைப் பிரார்த்தனை பண்ணிண்டிருந்தேன். என் பிரார்த்தனை வீண்போகலே, ஸ்வாமி செவி சாய்ச்சுட்டார்!" பாகீரதி, முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இன்றி சாதுவாக வந்து கின்றாள். 'ஏண்டா, மூர்த்தியை இங்க அழைச்சுண்டு வரதுதானே? இங்க எல்லாரும் அவனைப் பாக்கறதுக்கு ஏங்கிப் போயிருக் 119

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/124&oldid=918634" இலிருந்து மீள்விக்கப்பட்டது