பக்கம்:வேத வித்து.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அவன் எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் rேமமா இருந்தா சரி. நம்மையெல்லாம் மறந்தாலும் வேதத்தை மறக்காம இருக்கானே, அது போதும் எனக்கு' என்று பரம திருப்தியோடு பேசினார் கனபாடிகள். "சும்மா சொல்லக் கூடாது. வேதத்துல அசைக்க முடியாத கம்பிக்கை வெச்சிருக்கான். பக்தின்னா கொஞ்ச கஞ்சமில்லே, உலகத்துலயே வேதம்தான் பெரிசுங்கற அளவுக்குப் பெரிய ஞானி மாதிரி பேசறான்' என்றான் கிட்டா. 'எனக்குத் தெரியும். மகா உத்தமமான பையன் டா அவன். ம்... ஏதோ ஒரு கெட்ட வேளை அவனை ஆட்டிப் படைக்கிறது. கிட்டா, நீ போய் சீக்கிரம் ஸ்நானத்தை முடிச்சுண்டு வா. நேரமாறது' என்று சொல்லி அனுப்பினார். தோட்டப்பக்கம் போன கிட்டாவை பாகீரதி வழியில் மடக்கி மூர்த்தி என்னைப் பத்தி ஏதாவது சொன்னானா?" என்று குரலைத் தாழ்த்திக் கேட்டாள். "ஒண்ணும் சொல்லலை. பட்டுவேட்டியையும் புஸ்தகத்தை யும் கொடுத்தேன். வாங்கிண்டான். அவ்வளவுதான்' 'யார் கொடுத்தான்னுகூடக் கேட்கலையா?" 'கானே சொல்லிட்டேன்.' 'அதுக்கு என்ன சொள்னான்' "அதுக்கும் ஒண்னும் சொல்லலை. முகத்தில் ஒரு திருப்தி மட்டும் தெரிஞ்சுது!" "என்னைப் பத்தி ஒரு வார்த்தைகூடப் பேசலையா' 'பேசலையே!' "அப்புறம்?...' 'உள்ளே போயிட்டு கொஞ்ச நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்து பாக்கறேன். அந்த புஸ்தகத்துக்கு நீ போட்டிருந்த அட்டையைக் கிழிச்சுப் போட்டிருந்தான். ஏண்டா அட்டை போட்டா உனக்குப் பிடிக்காதோன்னு கேட்டேன். பதில் மழுப்பலா ஒரு சிரிப்பு அதோடு சரி!' 122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/127&oldid=918640" இலிருந்து மீள்விக்கப்பட்டது