பக்கம்:வேத வித்து.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகீரதி முகம் பிரகாசமாயிற்று. 'அம்மாடி! அட்டையைப் பிரிச்சுப் பார்த்திருக்கான்’ என்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சி அது! "அவனுக்கு அட்டை போடறதும் பிடிக்காது; சட்டை போடறதும் பிடிக்காது' என்று கேலியாகச் சொல்லிச் சிரித்துக் கொண்டே போய் விட்டாள். மே, வீதி பங்காரு காமாட்சி அம்மன் கோயிலுக்குப் போய் கோபுரம் தரிசித்து பிரதட்சிணமாக கடந்து போனபோது ஆலயமணியின் ரீங்காரம் மூர்த்தியை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது. வெள்ளிக்கிழமை சக்தியாகால பூஜை நேரம், தேங்காய், புஷ்பம், சுற்பூரத் தட்டுடன் சங்கிதியில் போய் நின்றான். 'அர்ச்சனையா, தீபாராதனையா?' அர்ச்சகர் கேட்டார். 'அர்ச்சனை!' பேர், நட்சத்திரம், கோத்ரம்' 'அம்மன் பேருக்கே பண்ணிடுங்க...' அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை முடித்து கற்பூர ஹாரத்தி காட்டி தட்டுடன் மூர்த்தியிடம் வந்து நின்றார் குருக்கள். மஞ்சுவின் உடல்நிலை தேறி பழையபடி கழைக்கூத்து செய்யத் தொடங்கினால் சுவாமிக்கு அர்ச்சனை செய்வதாக மூர்த்தியின் பிரார்த்தனை, - கோயிலிலிருந்து சத்திரத்துக்குப் போகும் வழியில் ஒரு முழம் தஞ்சாவூர்க் கதம்பம் வாங்கிக் கொண்டான். கதம்பம் என்றால் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்' என்று அவனுக்குத் தெரியும். - சத்திரத்து வாசலில் குதிரை வண்டி ஒன்று கின்று கொண்டிருந்தது. வண்டிக்குள் பாண்டு வாத்தியக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். 128

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/128&oldid=918644" இலிருந்து மீள்விக்கப்பட்டது