பக்கம்:வேத வித்து.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கள் தபோ பலத்தின் சக்தியால் வான வெளியில் சப்தரூபமாக உலவும் வேத மந்திரங்களை கிரகித்து இந்த பிரபஞ்சத்துக்கு வழங்கியிருக்கா, ஆனா இந்த மந்திரங்களை உண்டாக்கியவா ரிஷிகள் அல்ல. அவர்கள் கிரகித்துத் தந்தவர்கள்தான். வேதம் அகாதியானது, அதற்கு மூல புருஷன் யாரும் கிடையாது. "அபெளருஷேய' என்றுதான் சொல்வார்கள். காலம் காலமாக ஒலி வடிவமாகவே காப்பாற்றப்பட்டு வரும் வேதத்தைப் போற்றி வளர்ப்பவர்களைத்தான் வேதவித்து' என்கிறார்கள். வித்துக்கள் இல்லையென்றால் பயிர்கள் இல்லை. பயிர்கள் தழைக்க வித்துக்கள் அவசியம். அதைப்போல வேத வித்துக்கள் நசித்துப் போனால் வேதமே தழைக்காமல் போய் விடும். நீ இந்தப் புனிதமான பணியைப் பாதில விட்டுவிடாதே" என்றார். r மூர்த்தி உணர்ச்சி வசப்பட்டான். "மனதிலே பூட்டி வைத்துள்ள ரகசியங்களையெல்லாம் அக்கணமே அவர் எதிரில் கொட்டிவிடலாமா?' என்று யோசித் தான். ஆனாலும் சொல்லாமல் கட்டுப்படுத்திக்கொண்டான். 'மூர்த்தி, என் அந்திம காலத்துக்கு உதவியாக உன்னை என் புத்திரனாக ஸ்வீகாரம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்தேன். உன் அப்பா உன்னை என்னிடம் அழைத்து வந்து ஒப்படைத்தபோதே இதற்கு அவருடைய சம்மதத்தையும் பெற்றிருந்தேன். இனி அவனுக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம் நீங்கதான்' என்று சொல்லிட்டுப் போனார். இதை உன்னிடம் சமயம் வாய்க்கும்போது சொல்லி உன்னை என் புத்திரனாக்கிக்கொள்ளும் காலத்தை எதிர்நோக்கியிருந்தேன். ஆனா இப்ப கிட்டப்பா எழுதியுள்ள கடிதத்தைப் படிச்சப்புறம் அந்த எண்ணத்தை அடியோட மாத்திக்கொண்டு விட்டேன்' என்று கூறியவர் 'இந்தா, கிட்டப்பா என்ன எழுதியிருக்கார்னு ேேய படிச்சுப்பார்' என்று அந்தக் கடிதத்தை மூர்த்தியிடம் தந்தார் கனபாடிகள். 142

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/147&oldid=918683" இலிருந்து மீள்விக்கப்பட்டது