பக்கம்:வேத வித்து.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போகிறார்களாம். உங்க சப்தரிஷி வேதபாடசாலையில் யாராவது பொருத்தமான பையன் இருக்கானா?' என்று கேட்டார்கள். "வெண்ணெயை வைத்துக் கொண்டு செய்க்கு அலை வானேன்? நம்ப மூர்த்தி இருக்கானே, அவனையே தத்து எடுத்துகொள்ளலாமே!" என்று யோசனை சொன்னேன். அவர் களுக்குப் பரம சந்தோஷம். ஒருவேளை நீங்களே இப்படி ஒரு எண்ணம் வைத்திருக்கலாம், மூர்த்தியை சுவீகார புத்திரனாக்கிக் கொள்ளும் அபிப்ராயம் உங்களுக்கே இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். எதற்கும் உங்களை ஒரு வார்த்தை கேட்டு விட்டுப் பிறகுதான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். இதுபற்றி அவர்களிருவரும் தங்க ளிடம் பேசுவதற்கு அச்சப்படுவதால் அவர்கள் சார்பில் நானே இக்கடிதம் எழுதுகிறேன். உங்கள் அபிப்ராயம் தெரிந்த பிறகு தான் மேற்கொண்டு ஆக வேண்டியதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அடியேன் ஏதேனும் அதிகப்பிரசங்கித்தனமாக எழுதி யிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். இப்படிக்கு சாஷ்டாங்க சமஸ்காரங்களுடன் கிட்டப்பா. கனபாடிகள் சற்றுநேரம் கண்களை மூடி யோசித்தபின் ஒரு முடிவுக்கு வந்தவராய் 'ம். அப்புறம்?' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு ஈரத் துணியால் உடம்பைத் துடைத்துக் கொண்டார். "ஒரே புழுக்கமாயிருக்குடா விசிறி எடுத்துண்டு வந்து கொஞ்சம் வீசறயா?' என்று கேட்டார். மூர்த்தி ஓடிப்போய் விசிறி எடுத்து வந்து வீசத் தொடங்கினான். "நீ என்ன நினைக்கிறே மூர்த்தி?' என்று அவனை சம அந்தஸ்தில் உயர்த்தி வைத்துக் கேட்டார் கனபாடிகள். 'இதல நான் நினைக்கறதுக்கு ஒண்ணுமில்லை. நீங்க எது சொன்னாலும் அதுவே எனக்கு வேத வாக்கு உங்க இஷ்டப்படி கடந்துக்குவேன்' என்றான். "சரி, கெளரி ஆசைப்படறாளாம். அவளுக்கும் புத்திர பாக்கியம் இல்லே. உனக்கு சம்மதம்னா கிட்டப்பாவுக்கு லெட்டர் எழுதித் தரேன். நீ நாளைக்கே புறப்பட்டுப் போகலாம்' என்றார். 144

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/149&oldid=918687" இலிருந்து மீள்விக்கப்பட்டது