இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சர்க்கஸ்ல சேரச் சொல்லி தொந்தரவு பண்றானாம். மூர்த்தி சம்மதிச்சாத்தான் சேருவேன்'னு பதில் சொல்லிட்டானாம். 'அப்படி என்ன உறவு உனக்கும் அந்தக் குடுமிக்காரப் பையனுக்கும்?'னு கேட்டுச் சண்டை போட்றானாம் அவன். அடிக்கடி வந்து 'அந்தக் குடுமிக்காரப் பையனை ஒழிச்சுக் கட்டிடறேன் பார்’னு கலாட்டா பண்றானாம். குடிகாரனா யிருப்பான் போலிருக்கு முர்த்தி வந்தால் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க. அவருக்கு ஏதாச்சும் ஆயிட்டுதுன்னா அதை என்னால தாங்கிக்க முடியாதுன்னு என்கிட்டே வந்து அழுதாள். யாருப்பா அந்த சர்க்கஸ்காரன்?' என்று கேட்டார் கிட்டப்பா. 150