பக்கம்:வேத வித்து.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படலே. நீ வேதம் படிச்சுப் பெரியவனா ஆகணுங்கறதுதான் என் ஆசையும்.' "நீ அப்படியும் பேசற; இப்படியும் பேசறே! ஏன், எதனாலன்னு புரியலை. ஆச்சரியமாயிருக்கு." - "இப்ப என் உடம்பிலே உன் ரத்தமும் சேர்ந்து ஒடுதே! ஒரு வேளை அதனால இருக்குமோ, என்னவோ?" 'அப்படின்னா நீ?...' 'எனக்கு ஒண்னும் புரியலே. என்ன செய்யறதுன்னும் தெரியலே." "பயப்படாதே! அந்த சர்க்கஸ்காரனை கல்லவனா மாத்திடலாம். யுேம் சர்க்கஸ்ல சேர்க் துடு, இது வரைக்கும் அவனுக்கு லைசன்ஸே கொடுக்கலையாம். கிட்டப்பாதர்ன் லைஸ்ன்ஸ் கொடுக்கணுமாம். அவரே சொன்னார். அவர்தான் இந்த ஊர் முனிசபல் சேர்மனாம். மழை இல்லாம பயிர் பச்சை யெல்லாம் வாடி ஜனங்க ரொம்ப கஷ்டப்பட றாங்களே, இந்த சமயத்துல சர்க்கஸ்-க்கு அனுமதி கொடுத்தா ஜனங்ககிட்ட இருக்கிற கொஞ்சகஞ்சம் காசும் போயிடுமேன்னு யோசிக் கிறாராம்.' "அப்படியா? லைஸ்ன்ஸ் கொடுக்கலேன்னா அந்த ஆள் தாக்குப்பிடிக்க முடியாம ஊரைவிட்டே ஓடிடுவான்' "சே, பாவம்! சர்க்கஸ் மிருகங்களெல்லாம் பட்டினி கிடந்து செத்துப் போயிடுமே! அத்தனைக்கும் தீனி போட பணத்துக்கு எங்க போவான்?' என்று பரிதாபப்பட்டான் மூர்த்தி, "உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியலே, மூர்த்தி! அந்த ஆள் உனக்குக் கெடுதல் நினைக்கிறான். யோன்ா அவனுக்கு கல்லது கினைக்கிறேl' - "நமக்கு இன்னொருத்தர் தீங்கு கினைச்ச்ாலும் காம அவங்களுக்கு நல்லதுதான் செய்யனும். அப்படி செய்யலேன்னா குறள் படிச்சு என்ன பிரயோஜனம்? சேர்மனிடம் பேசி எப்படியும் லைஸன்ஸ் வாங்கிக் கொடுக்கப் போறேன். அந்த சர்க்கஸ் ஆளை கிட்டப்பா வீட்டுக்கு இப்பவே வரச் சொல்லு. நான் அங்கயே அவனுக்காக காத்துண்டிருப்பேன்" என்றான். 158

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/158&oldid=918708" இலிருந்து மீள்விக்கப்பட்டது