பக்கம்:வேத வித்து.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'முதல் முதல் உதவி கேக்கறே, பெரிய உதவியாத்தான் கேளேன்' என்றார் கிட்டப்பா. "இதுவே பெரிய உதவிதான். சர்க்கஸுக்கு லைஸன்ஸ் இல்லேன்னு சொல்லிட்டேளாம். பாவம், யானை சிங்கமெல்லாம் பட்டினியாக் கிடக்கறதாம். தீனி வாங்கிப் போட பணமில்லாம திண்டாடறானாம் அந்த சர்க்கஸ் ஆள். நீங்கதான் காபபாத்தனும் அவனை' என்றான் மூர்த்தி. "என்ன சொல்ற நீ அந்த துஷ்டனுக்கா உதவி பண்ணச் சொல்றே?" - "இப்ப நீங்க உதவி பண்ணலேன்னா அத்தனை பேரும் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான். சர்க்கஸ் கூடார யே காத்துல பறந்திண்டிருக்கு' என்றான். "அதோ, அவனே வரான் போலிருக்கே!' என்றார் கிட்டப்பா. வந்தவன், 'ஐயா என்னைக் காப்பாத்துங்க' என்று உணர்ச்சிவசமாகச் சொல்லிவிட்டு கிட்டப்பாவின் காலில் விழுந்தான். - 'முதல்ல இவர் காலில் விழு. அப்புறம்தான் மற்ற தெல்லாம்...' என்றார் கிட்டப்பா. 'தவறா நினைச்சு கோவத் துல ஏதேதோ பேசிட்டேன். எவ்வளவு கல்லவர்னு இப்பத்தான் தெரியுது. என்னை மன்னிச்சுடுங்க முர்த்தி!' என்று முர்த்தியின் காலில் விழப் போனான். வேணாம், வேணாம், பெரியவருக்குப் பண்ணாப் போதும்' என்று ஒதுங்கி நின்றான் மூர்த்தி. 'உன் பேர் என்னபபா சொன்னே?' என்று கேட்டார் கிட்டப்பா. w - 'துக்காராம்...' என்றான். y "அவர் ரொம்ப சாதுவாச்சே! அவர் பேரை வெச்சுண்டு நீ கேர்மாறா கடந்துக்கறயேl' என்றார் கிட்டப்பா. அவன் தலைகுனிந்து வெட்கப்பட்டான். 156

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/161&oldid=918716" இலிருந்து மீள்விக்கப்பட்டது