பக்கம்:வேத வித்து.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இனிமே குடிக்கமாட்டயே?' "சத்தியமா குடிக்கமாட்டேங்க' என்றான். 'சத்தியத்தை மீறிக் குடிச்சயானா தொலைச்சுப்புடுவேன், ஜாக்கிரதை ஒரு நல்ல நாளாப் பார்த்து சர்க்கஸை ஆரம்பிச்சுடு. டிக்கட் ரேட்டைக் குறைச்சு வை, லைஸன்ஸ் தரச் சொல்றேன்" என்று சொல்லி அனுப்பினார் கிட்டா. அந்த மகிழ்ச்சியில் அவன் எதுவும் பேசத் தோன்றாமல் வாயடைத்து நின்றான். - 'இன்னும் ஏன் கிக்கறே? புறப்படு' என்றார் கிட்டப்பா. 'உங்க உதவிக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே. என் கன்றிக்கு அடையாளமா ஏதாவது...' "என்ன செய்யப்போறே?" "ஒரு யானையே வேணுமானாலும் கொடுத்துடறேங்க." "ஏன்? அதைக் கட்டித் தீனிபோட முடியலையோ? என் தலைல கட்டிடலாம்னு பாக்கறயா! வேணாம்; நன்றி மனசுல இருந்தாப் போதும். முக்கியமா மூர்த்திக்குத்தான் நீ நன்றி செலுத்தணும். மூர்த்திகிட்ட மரியாதையா கடந்துக்க. அது போதும்' என்றார். 'அடுத்த ஞாயிற்றுக்கிழமையே ஆரம்பிச்சடறேன். நீங்க ரெண்டு பேரும்தான் வந்து தொடங்கி வைக்கனும்!' குரலில் மகிழ்ச்சி பொங்கக் கூறிக்கொண்டே கையெடுத்துக் கும்பிட்டான் துக்கா ராம். - 157

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/162&oldid=918718" இலிருந்து மீள்விக்கப்பட்டது