"நான் இல்லாதப்ப மூர்த்தி வந்திருந்தானாமே?' கிட்டா கேட்டான். "ஆமாம்; சமையல் ராவ்ஜியை அழைச்சுண்டு வந்தான். உங்க மாமா. கிட்டப்பு லெட்டர் கெர்டுத்தனுப்பிருந்தார். கெளரி மூர்த்தியை தத்தெடுத்துக்க ஆசைப்படறளாம். என் அபிப்ராயம் என்னன்னு கேட்டிருந்தார், எனக்குப் பூர்ண சம்மதம்னு பதில் எழுதி மூர்த்தியிடமே கொடுத்தனுப்பிட்ட்ேன்.' "மூர்த்தி தஞ்சாவூர்லயேதான் வேதம் படி க் க ப் போறானா? இங்கே வரமாட்டானா?" என்று கேட்டான் கிட்டா. "என்ன சொன்னே? வேதம் படிக்க...' என்று இழுத்தார் கனபாடிகள். "படிக்கப் போறானான் னு கேட்டேன்." "வேதம் படிக்கிறதுன்னு சொல்லக் கூடாது. ஒதறதுன்னு சொல்லணும்; எழுதப்பட்டதைத்தான் படிக்கலாம். ஒலியை ஒதணும். மிருதங்கம் அடிக்கிறான்னு சொல்லக் கூடாது. வாசிக்கிறான்னு சொல்லனும்.' வோசலில் வந்து கின்ற ஜட்காவிலிருந்து அத்தையும் அவள் கணவர் அருணாசலமும் இறங்கி வந்தார்கள். பட்டுப் புடவையும் காசு மாலையும் பளபளக்க முக மலர்ச்சியோடு வந்து நின்ற பணக்கார அத்தையை பாகீரதி அப்படியே தழுவிக்கொண்டு வாங்க அத்தை கார்த்தால் லேந்து உங்க் நினைவுதான். உங்களுக்கு ஆயுசு நூறு!" குதுக்லம் பொங்க வரவேற்றாள் பாகீரதி. கையில என்ன அது செம்பு!" என்று கேட்டான் கிட்டா. - "க ங் ைக ச் செம்பு தெரிஞ்சவா காசியாத்திரை போயிருந்தா. அவா கொண்டு வந்து கொடுத்தா. புண் ணிய தீர்த்தம். அண்ணாவுக்குக் கொடுக்கலாம்னு கொண்டு வந்தேன்" என்றாள் கெளரி அத்தை. 159
பக்கம்:வேத வித்து.pdf/164
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை