'சரி, உனக்கப்புறம் அ வா ள் ள ம் வந்து உன் பொண்ணைக் காப்பாத்து வாளாமா? அதைக் கேளு; என்ன பதில் சொல்றா பாப்போம்.' 'நீ அன்னைக்கு அவளுக்கு தாழம்பூ வெச்சு தலைபின்னி அழகு பார்த்தப்பவே கினை ச்சேன். உன் மன சில ரொம்ப நாளா இப்படி ஒரு விபரீத ஆசை இருக்குன்னு எனக்கு அன்னைக்கே தெரிஞ்சு போச்சு!" என்றார். 'இப்ப கான் சொல்றது உனக்கு அக்ரமமாத்தான் தோணும் நீயே நிதானமா யோசிச்சுப் பார்த்தா நியாயம் புலப்படும்!" 'இப்படி ஒரு அதர்மத்துக்கு நான் சம்மதிச்சா தெய்வம் என்னை சும்மா விடாது." என்ன பண்ணும்?' "கரகத்துக்கு அனுப்பும்' 'அனுப்பட்டுமே தெய்வம் கொடுக்கிற தண்டனை அதுதான்னா, பாகீரதியோட எதிர்கால வாழ்க்கைக்காக நீ அதை தாராளமா ஏத்துக்கலாம், பரவால்லே' என்றாள் கெளரி. "நீ இந்த அளவுக்குப் பேசுவேன்னு நான் கினைக்கலே." கெளரிக்கும் அப்பாவுக்கும் கடந்த வாக்குவாதத்தை தூண் மறைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்த பாகீரதி இந்த அத்தை ஒரு அதிசயப் பிறவிதான்! அப்பாவிடம் எத்தனை சாமர்த்தியமா வாதாடறாள். ஆனாலும் இந்த அத்தைக்கு ரொம்ப தைரியம் ஜாஸ்தி!' என்று மனசுக்குள் வியந்து கொண்டாள். அடுத்தகணம் 'பாகீரதி கீ இன்னைக்கு சிதம்பரம் போகப் போறே நாளைக்கே அங்கு மூர்த்தி வருவான்! அத்தை உனக்குத் தாழம்பூ வெச்சுத் தலைபின்னி விடுவா! காசு மாலையைக் கழற்றி உன் கழுத்துல் போடுவா! அந்த அலங் காரத்தை மூர்த்தி பார்ப்பான்' என்று அவள் உள் மனம் உற்சாகத்தில் விசிலடித்தது. 164
பக்கம்:வேத வித்து.pdf/169
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை