í á தெய்வம் கொடுக்கற தண்டனை அதுதான்னா, பாகீரதியோட எதிர்கால வாழ்க்கைக்காக நீ அதை தாராளமா ஏத்துக்கலாம், பரவாயில்லே.' கெளரியின் இந்த வார்த்தை கனபாடிகளின் மன அடிவாரத் தில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது. 'இப்ப நான் சொல்றது உனக்கு அக்ரமமாத்தான் தோணும். நீயே நிதானமா யோசிச்சுப் பார்த்தா நியாயம் புலப்படும்.' 'உண்மைதான்; நியாயந்தான். பாகீரதியின் எதிர்காலம் பற்றி நான் தீர்க்கமா யோசிக்க வேண்டியதுதான்." யோசித்தார்; இரவெல்லாம் யோசித்தார். துரக்கம் இல்லாமல் திண்ணையில் போய் உட்கார்ந்து, தெருவில் போய் கின்று, முன்னும் பின்னும் கடந்து, ஆகாசத்தைப் பார்த்து... - நிலா வானம் நிர்மலமாய்த் தெரிந்தது. ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. தாகம் நெஞ்சை வறட்டியதால் வீட்டுக்குள் வந்து தண்ணிர் அருந்தினார். ஊஞ்சலில் உட்கார்ந்தார். கிட்டா அயர்ந்து குறட்டைவிட்டுக் கொண்டிருந்தான். 'பாவம், ரொம்ப அலைச்சல் அவனுக்கு' 165
பக்கம்:வேத வித்து.pdf/170
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை