பக்கம்:வேத வித்து.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளும் விடமாட்டேன்! வேதத்துக்கும் விவசாயத்துக்கும் வித்து தானே முக்கியம் வித்து அற்றுப்போனா வேதமும் போச்ச், வி வ ச | ய மு ம் போச்சு பயப்படாதீங்க. ஒரே வாரம் பொறுத்துக்குங்க. கான் வந்து விராடபர்வம் வாசிக்கிறேன்; நிச்சயம் மழை வந்துடும். கம்பிக்கையோடு இருங்க' என்றார். 'ஒரு வாரமா! நாளைக்கே ஆரம்பிச்சுட முடியாதா?" என்று கேட்டான் ஒரு விவசாயி. 'முடியாதப்பா ! இத பார்த்தயாரி என் கால்ல செம்மையா அடிபட்டிருக்கு. சப்பணம் போட்டு உட்கார முடியாது. விராடபர்வம் வாசிக்கணும்னா ரெண்டு மணி நேரமாவது உட்கார்ந்திருக்கனுமே. அடுத்த வாரம் நிச்சயம் ஆரம்பிச்சுடலாம். பதிமூணாம் தேதி சிதம்பரத்துலே ஒரு விசேஷம். அதுக்கு கான் கண்டிப்பா போயாகணும். போயிட்டு பதினாலு வந்துடுவேன். பதினஞ்சு வச்சுக்குங்க' என்றார். 'ரொம்ப சந்தோசம், உங்களுக்குக் கோடி புண் ணியம் உண்டு. மவராசனாயிருப்பீங்க ' என்று வாழ்த்திவிட்டுப் புறப் பட்டார்கள் குடியானவ மக்கள். பிராம்மணர்கள் புறப்பட ஆயத்தமானபோது, "நீங்கள்ளாம் கொஞ்சம் இருந்துட்டுப் போக முடியுமா? உங்களோடு முக்கியமா ஒரு விஷயம் பேசணும். என் சொந்த விஷயம்தான்' என்று விகயமாய்க் கேட்டுக் கொண்டார் கனபாடிகள். "எங்களோடயா?' என்றார் ஒருவர். "ஆமாம்; என் மகள் பாகீரதி விஷயமா இது வரைக்கும் நான் எதுவுமே யோசிக்காம இருந்துட்டேன். என் முச்சு இருக்குப்பவே அவளுக்கு ஒரு வழி செய்துடனும்னு நினைக் கிறேன்." . 'அதுக்கு காங்க என்ன செய்ய முடியும்?' 'நீங்க ஒண்னும் செய்ய வேணாம், கனபாடிகள் பெண் சீர்கெட்டு அலையறாங்கற அவப்பெயர் அவளுக்கு வரக்கூடாது. அவள் எதிர்காலம் என்னங்கறதை நான் முடிவு பண்ணியாகணும். இந்த விஷயத்துல உங்க அபிப்ராயம் என்னன்னு தெரிஞ்சுக்க விரும்பறேன்.' 168

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/173&oldid=918744" இலிருந்து மீள்விக்கப்பட்டது