பக்கம்:வேத வித்து.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதஞ்சாவூர்ல நல்ல தாழம்பூ கிடைக்குமா, அத்தை' என்று நாகுக்காய் ஞாபகப்படுத்தி வைத்தாள் பாகீரதி. "ஓகோ அதை மறந்துட்டனோ வாங்கிண்டு வரச் சொல்றேன். மூர்த்தி வரான் இல்லையா! உனக்கு முதல் நாளே த்ாழம்பூ வெச்சு தலை பின்னிடறேண்டா, கண்ணு' என்று செல்லம்ாக பாகீரதியின் கன்னத்தைத் தட்டிச் சிரித்தாள் கெளரி. "நான் தாழம்பூ வச்சுக்கறதுக்கும் மூர்த்தி வர துக்கும் என்ன சம்பந்தம்? அத்தை என்னத்தை மனசுல வச்சுண்டு இப்படிப் பேசறா?' என்று சந்தேகப்பட்டாள் பாகீரதி. முகூர்த்தத்துக்கு முதல் நாள் சாயந்திரம் கிட்டப்பாவும் மூர்த்தியும் ஏகப்பட்ட சாமான்களோடு காரில் வந்து இறங்கி ன்ார்கள். மூர்த்தியை வாசலிலேயே நிற்கச் சொல்லி ஆரத்தி சுற்றிக் கொட்டி மேளவாத்தியத்துடன் உள்ளே அழைத்துச் சென்றாள் அத்தை, "சமையல்காரா வரலையா?" என்று கேட்டாள் கெளரி. "பஸ்ல வந்துண்டிருக்கா' என்றான் மூர்த்தி. "தாழம்பூ கொண்டு வந்திருக்கேன் என்று கிட்டப்பா சொன்னதுமே மற்ற வேலைகளையெல்லாம் மறந்துவிட்டு பாகீரதிக்குத் தலைபின்னத் தொடங்கி விட்டாள் அத்தை. கூடத்தில் 'ஹிஸ்மாஸ்டர்ஸ் வாய்ஸ் தகரக்குழாய் கிராம போனில் எஸ்.ஜி. கிட்டப்பா கோடையிலே இளைப்பாறி பாடிக் கொண்டிருந்தார். - எல்லோரும் கூடத்தில் வந்து உட்கார்ந்து பாட்டு கேட்க ஆரம்பித்தார்கள். கிராமபோன் பிளேட்டில் ஏற்பட்டிருந்த கீறல் காரணமாக பாட்டு தடைப்பட்டு 'கோடையிலே...கோடையிலே... கோடையிலே...' என்று ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்! கிராமபோனை கிறுத்தச் சொல்லிவிட்டு'நீங்கள்ளாம் ஆளுக்கொரு பாட்டுப் பாடுங்களேன், கேட்போம்' என்றார் கிட்டப்பா. - 172

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/177&oldid=918750" இலிருந்து மீள்விக்கப்பட்டது