நீ ரொம்ப கம்பிக்கையோடதான் இருக்கே! பார்க்கலாம்" என்று சிரித்துக்கொண்டே புறப்பட்ார் கன பாடிகள். சீனிக்கிழமை ராத்திரி எட்டு மணிக்கு விராடபர்வம் கடக்கப் போவதாக ஊர் மக்களுக்கு தண்டோரர் போட்டு அறிவித்தார்கள். பஜனை மடம் வாசலைப் பெருக்கி, தண்ணிர் தெளித்து, கோலம்போட்டு, சுவாமி படங்களுக்கு மாலை அலங்காரம் செய்து, குத்துவிளக்கு ஏற்றிவைத்து எல்லின் ஏற்பாடுகளையும் கிட்ட்ச தான் ஓடி ஆடிச் செய்து கொண்டிருந்தான். ரொம்ப நாளைக்கப்புறம் கனபாடிகள் கதை சொல்கிறார் ஒன்பதால் ஊர் மக்களோடு, அடுத்த சிரமத்து ஜனங்களும் திருவிழாக் கூட்டம் போல் பஜனை மடத்தில் கூடியிருந்தார்க்ள். கனபாடிகள் அன்று காலையிலிருந்தே உபவாசம் இருந்து, பக்தி சிரத்தையோடு வந்து மனையில் உட்கார்ந்தார். ப்ெட்ரோமாக்ஸ் விளக்கு புஸ்புஸ் என்று அணைந்து அணைந்து எரிய, விட்டில் பூச்சிகள் விளக்கைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. பஞ்சாயத்துத் தலைவர் கனபாடிகளுக்கு மாலை போட்டு விழாவைத் துவக்கி வைத்ததும், கனபாடிகள் கழுத்தில் போட்ட மாலையோடு பேச்சைத் தொடங்கினார். ••ტა? யாச பகவான் அருளிய மகாபாரதம் மொத்தம் பதினெட்டு பர்வங்கள் அடங்கியது. நாலாவதுதான் விராடபர்வம், பாண்டவர்கள் வனவாசம் முடிந்து ஓராண்டு காலம் அஞ்ஞாத வாசம் செய்வதற்கு ஏற்ற இடமாக விராடனுடைய மச்ச நாட்டைத் தேர்ந் தெடுத்தார்கள். விராட மகாராஜாவுக்கே தெரி யாமல் திரெளபதியும் பாண்டவர்களும் மாறு வேடத்தில் அங்கே வாழ்ந்து வருகிறபோது திரெளபதியின் அழகில் மயங்கிய கீசகனை பீமன் வதம் செய்வதும் விராடனின் மச்ச காட்டுப் 177
பக்கம்:வேத வித்து.pdf/182
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை