பக்கம்:வேத வித்து.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசுக்களை கெளரவர்கள் மடக்கிச் செல்வதும், அர்ஜுனன் அலியாக மாறி ராணியின் அந்தப்புரத் தில் பணிபுரிவதும், விராடராஜனுடைய மகன் உத்தரனுக்கு உதவியாகத் தேரோட்டிச் சென்று பசுக்களை மீட்பதும் இ ங் த பர்வத்தில்தான் கடக்கிறது. பல சோதனைகளுக்கிடையே ஒரு வருஷகாலம் அஞ்ஞாதவாசம் இருந்து அதை வெற்றிகரமாக முடிக்கும் பாண்டவர்கள் த ங் க ள் உண்மை .ெ ச | ரு ப த் ைத வெளிப்படுத்துவதும் இந்த பர்வத்தில்தான். அதுவரை பஞ்சம் தலைவிரித்து ஆடிய விராட ராஜன் தேசத்தில் பரம துஷ்டனான கீசகனை பீமன் வதம் செய்து ஒழித்த பின் அந்த காட்டில் சு பி ட் ச ம் தாண்டவமாடத் தொடங்குகிறது. பாண்டவர்களுக்குப் புகலிடம் தந்து அவர்களை வெற்றி காணச் செய்த தேசம், விராடனுடைய மச்சதேசம். ஆகவே, இந்த உன்னதமான கதையை எப் போது, யார், எங்கே சொன்னாலும் அங்கே மழை பெய்யும் என்றும் கபிட்சம் உண்டாகும் என்றும் ஓர் அசைக்க முடியாத கம்பிக்கை இந்த பாரத தேசத்தில் பரவியிருக்கிறது. கான் இதுவரை ஏழு இடங்களில் விராட பர்வம் கதை சொல்லியிருக்கிறேன். ஏழு தடவை யும் மழை பெய்யத் தவறியதில்லை. இந்தப் பெருமை என்னைச் சேராது. பாரதக் கதையின் மகிமை அப்படி. இன்றைக்கும் மழை பெய்யும் என்கிற திட நம்பிக்கையோடு கதையைத் தொடங்கு கின்றேன்' என்று பூர்வ பீடிகையாகக் கூறிவிட்டு கணிரென்ற சங்கீதக் குரலில் சுலோகங்களைச் சொல்லத் தொடங்கியதும் அங்கே தெய்வீகமான ஒருகுழ்நிலை உருவாயிற்று. 178

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/183&oldid=918764" இலிருந்து மீள்விக்கப்பட்டது