"உங்க எல்லாரையும் இன்னைக்கு சேர்ந்தாப்ல பாக்க றப்போ எனக்கு மனசு நிறைஞ்சு இருக்கு. நீங்க அத்தனை பேரும் அக்கறையா வந்து கதை கேட்டதில் பரம திருப்தி எனக்கு. எல்லாரும் கேடிமமா இருங்கோ' என்று ஆசீர்வதித் தாா. "சரி, எல்லாரும் போய்ப் படுத்துத் துரங்குங்க. மழை பலமா வரும்போல இருக்கு. மணி ஒண்ணாகப் போறது" என்றாள் கெளரி. கனபாடிகள் மெதுவாக எழுந்து போய்த் தம் அறையில் படுத்துக் கொண்டார். தூக்கம் வராததால் எழுந்து உட்கார்ந்து சற்று நேரம் எதையோ படித்துக் கொண்டிருந்தார். வானம் தொடர்ந்து உ று மி க் கொண்டிருந்தது. கனபாடிகள் ஒரு வெள்ளைத் தாளை எடுத்து ஏதோ எழுதத் தொடங்கினார். எழுதி முடித்துவிட்டு மறுபடியும் படுத்தார். பொது விடிந்தது. ராத்திரி பெய்யத் தொடங்கிய மழை ஒயவில்லை. பிரளயமே வந்ததுபோல் பெய்த மழையில் மண்குடிசைகளும் மரம், செடி கொடிகளும் அடியோடு தலைவிரி கோலமாய்ச் சாய்ந்து வீழ்ந்து கிடந்தன. விடிந்த பிறகும் கனபாடிகள் துரங்கிக் கொண்டிருந்தார். "என்னை ஆறு மணிக்கெல்லாம் எழுப்பிடுடான்னு சொல்லிட்டு படுத்தவர் இன்னும் இப்படித் துரங்கறாரே!' என்று வியந்து கொண்டே கனபாடிகள் அறைக்குச் சென்று பார்த்த கிட்டா 'அத்தை' என்று வீடே அ தி ரு ம் படி கூக்குரலிட்டான், "என்னடா?' என்று அலறி அடித்துக் கொண்டு எல்லோரும் கனபாடிகள் படுத்திருந்த அ ைற க் கு ஒடிச் . சென்று பார்த்தார்கள். கனபாடிகள், சாந்தமாக, நிம்மதியாக ஆண்டவன் திருவடி களில் உறங்கிக் கொண்டிருந்தார். அந்த அணில் குஞ்சு கனபாடிகள் இறந்துபோனது தெரியாமல் அவர் மீது ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தது. 180
பக்கம்:வேத வித்து.pdf/185
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/69/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.pdf/page185-756px-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.pdf.jpg)