பக்கம்:வேத வித்து.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனபாடிகள் எழுதி வைத்த வெள்ளைத்தாள் அவர் பக்கத்தில் கிடந்தது. கிட்டப்பா அதை எடுத்துப் படித்தார். அன்புள்ள கெளரிக்கு, பிளி கடுக்கிக் கீழே விழுந்ததிலிருந்தே இரண்டு மூன்று நாட்கள்ாகவே என் உடல்நிலை சரியில்லை. வயதானவர்கள் கீழே விழக்கூடாது என்று சொல்வார்கள். சுவீகார முகூர்த்தம் சுபமாக முடிந்ததில் சந்தோஷம். விராடபர்வம் வாசிப்பதாகக் கொடுத்த வாக்கையும் கிறைவேற்றிவிட்டேன். கொஞ்ச காளாகவே எனக்கு அவ்வப்போது லேசாக மார்வலி வருவதுண்டு. நீ ங் க .ெ ள ல் லா ம் கவலைப்படுவீர்கள் என்பதால் யாரிடமும் சொல்லாமலிருந்தேன். இப்போதுகூட வலித்துக் கொண்டுதா னிருக்கிறது. என் உயிர் பிரியப் போகும் தருணம் நெருங்கிவிட்டதாகவே தோன்றுகிறது. வெளியில் பேய் மழை பெய்து கொண்டிருக்கிறது. எல்லாம் விராடபர்வத்தின் மகிமைதான். பாகீரதியின் கவலைதான் என்னை வாட்டிக் கொண்டிருக்கிறது. பாசம் ஒரு புறமும் தர்மம் ஒரு புறமுமாக நின்று என்னுள் ஒரு போராட்டம் கடந்து கொண்டிருந்தது. என் காலத்திலேயே பாகீரதிக்கு ஒருகல்ல வாழ்க்கையை அமைத்துவிட எண்ணி ஊராரை அழைத்துப் பேசினேன். அ வ ர் க ளி ல் யாருமே பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை. இப்போது நான் எடுத்துள்ள முடிவு உனக்கும் உலகத்துக்கும் ஆச்சரியம் தரலாம். - வேதத்தையும் தர்மங்களையும் ஊருக்கு போதித் தேன், வேத பாடசாலை நடத்தினேன். இரண்டு முறை யாகங்கள் செய்தேன். சாஸ்திர்ங்களைப் போற்றினேன். 'சாஸ்திரத்தை இஷ்டம்பேர்ல் நமது வசதிக்கேற்றபடி யெல்லாம் மாற்றக் கூடாது' என்று வாதாடினேன். இப்போது சோதனையாக, நானே அதை மீறவேண்டிய கிலைக்கு வந்து விட்டேன். பாகீரதிக்கு மறுமணம் என் பு து சாஸ்திர விரோதம்தான், அதர்மமான காரியம்தான். ஆனாலும் 181

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/186&oldid=918769" இலிருந்து மீள்விக்கப்பட்டது