பக்கம்:வேத வித்து.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முர்த்தி பாடசாலைக்குத் திரும்பிப் போய் மீண்டும் குளித்தான். என்ன, மூர்த்தி, ஏன் மறுபடியும் குளிக்கிறே?" என்று கேட்டாள் பாகீரதி, அவளுக்கு ஏதோ பொருத்தமில்லாமல் பதில் கூறிவிட்டு வேட்டி உலர்த்த தோட்டப் பக்கம் போனான். மனசே சரியில்லை அவனுக்கு. அந்தப் பெண் எந்தக் குலமோ? என்ன ஜாதியோ? என்னைத் தொட்டுத் தூக்கிக் கரையில் சேர்த்தாள். தீட்டு குளித்தவள். நான் பிராமணன். ஆபத்துக்கு தோஷமில்லை என்று சொல்வார்கள்' என்று தனக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டு விபூதியைக் குழைத்து மார்பிலும் கழுத்திலும் பூசிக்கொண்டான். அப்போது தன்னுடைய கழுத்து வெறுச்சிட்டிருப்பதை உணர்ந்து திடுக்கிட்டான். 'ஐயோ, என் கழுத்திலிருந்த சங்கிலி எங்கே?'

17

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/19&oldid=1281553" இலிருந்து மீள்விக்கப்பட்டது