பக்கம்:வேத வித்து.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கொண்டி கிட்டா காளைக்கு வரதா கடிதாசி போட் டிருக்கான். காளையிலேர்ந்து அவன் எல்லா வேலையும் கவனிச்சுப்பான். அப்பாவும் காஞ்சீபுரம் போறாளாம். யாகம் பண்ண பிராம்மனோத்தமர்களையெல்லாம் சதஸ்கூட்டி சால்வை போர்த்தி சன்மானம் தரப் போறாளாம் பெரியவா." 'கனபாடிகள் காஞ்சீபுரம் புறப்படுவதற்குள் அவரிடம் காலம்பற சமாசாரத்தைச் சொல்லி விடலாமா?' என்று யோசித்தான் மூர்த்தி, - . * வேண்டாம்; சொல்ல வேண்டாம். அதான் அர்க்கியம் விட்டு சூரிய பகவானிடம் வேண்டிக் கொண்டாச்சே மனத்தாலும், வாக்காலும். கைகளாலும், வயிற்றாலும், ஆண் குறியாலும் எந்தப் பாவத்தைச் செய்தேனோ, இன்னும் என் னிடத்தில் வேறு என்ன பாவம் உண்டோ அவ்வளவையும் நீக்கியருள வேண்டும் என்று சூரியவடிவான பரஞ்சோதியில் ஹோமம் செய்தாச்சே' என்று உள் மனம் வாதாடியது. முர்த்தி-அந்த மூத்த வாழைமரத்தை அடியோடு வெட்டி வந்து துண்டு போடத் தொடங்கினான். அலைபாயும் எண்ணங் களைக் கட்டுப்படுத்த முடியாமல் மனதை ஒரு நிலைப்படுத்த இயலாத நிலையில் குழம்பிக்கொண்டிருந்த அவனுக்குள் அந்தச் சங்கிலி எங்கே போயிருக்கும்? எப்படிப் போயிருக்கும்?' என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் எழுந்து வாட்டிக் கொண்டிருந்தது. வெள்ளத்தில் போயிருக்குமோ? அந்தக் கழைக்கத்தாடிப் பெண்-மஞ்சு எடுத்துப் போயிருப்பாளோ? ஊஹூம் அவள் எடுத்திருக்கமாட்டாள். அப்படிப்பட்ட பெண் அல்ல அவள்1'உயிரைக் காப்பாற்றுவது ஒரு கடமை இல்லையா?' என்று கேட்டவளாச்சே! சாப்பிடக் கூப்பிட்டபோது வேண்டாம். உழைக்காமல் சாப்பிடுவது எங்க வழக்கமில்லை' என்று மறுத் தவளாச்சே! அவள் எடுத்திருக்க மாட்டாள். வெள்ளம்தான் கொண்டு போயிருக்கணும்.-மஞ்சு ஜல தேவதைபோல் நனைந்த ஆடையில் யெளவனத்தின் பூரிப்பில் ஒருகணம் அவன் கண்முன் மின்னலாய்த் தோன்றி மறைந்தாள். 'மூர்த்தி இது உன் அம்மாவின் சங்கிலிடா, மூணு பவுன். இகை எப்போதும் கழுத்தில் அணிந்து கொண்டிரு. அம்மா இந்தச் சங்கிலி ருபமாக உன்னை ஆசீர்வதித்துக் கொண்

19

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/21&oldid=1281555" இலிருந்து மீள்விக்கப்பட்டது