பக்கம்:வேத வித்து.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘'எதுக்கு இப்படித் துடிக்கிறே? இங்கே இருக்கப் பிடிக்கலையா? என்னோடு பேசப் பிடிக்கலையா? உனக்கு இஷ்டமில்லேன்னா நீ பல்லாங்குழி ஆட வேணாம். தோட்டப் பக்கம் வாயேன். வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து சந்தோஷமாப் பேசிண்டிருக்கலாம்.' "இல்லை பாகீ! நீ கொஞ்ச நேரம் தூங்கு, பாவம்' உனக்குத்தான் நாளெல்லாம் வேலை. நான் போயிட்டு இதோ வந்துடுறேன்' என்று புறப்பட்டு விட்டான். போகிற வழியில்தான் சரபோஜி சத்திரம் இருந்தது. 'கழைக்கூத்தாடிப் பெண் மஞ்சு, அங்கதானே தங்கி யிருப்பதாகச் சொன்னாள்? அவளைப் பார்க்க வேண்டும்போல் உள்ளுக்குள் ஒரு ஆசை பொங்கியது. தன்னைக் காப்பாற்றிய வளுக்கு நன்றிகூடச் சரியாகச் சொல்லவில்லையே' என்று எண்ணியபடியே சத்திரத்தை நோக்கி கடந்தான். அங்கே வாசலில் உட்கார்ந்திருந்த சத்திரத்துக் காவலாளியிடம் 'அந்த கழைக் கூத்தாடிங்க இங்கதானே தங்கியிருக்காங்க?' என்று கேட்டான். 'அவங்களா இப்பத்தானே புறப்பட்டுப் போனாங்க!” என்றான் காவல்காரன். "எங்க போனாங்கன்னு தெரியுமா?" 'திருவையாறு போறதாச் சொன்னாங்க, ' 'அடாடா, கொஞ்சம் முன்னாடி வராமல் போனோமே!' என்ற ஏமாற்றத்தோடு திரும்பினான். தெருவிகள் ஏற்றப்பட்ட பிறகே முர்த்தி பாட சாலைக்குத் திரும்பினான். வித்தியார்த்திகள் இனிய சங்கீதமாய்ப் புருஷ ஸ9க்தம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். முர்த்தி நேராக கிணற்றடிக்குப் போய் கைகால், முகம் கழுவி, விபூதி பூசி, சந்தியாவந்தனம் முடித்து புருஷ லூக்தத்தில் கலந்துகொண்டான். சத்திரத்து மணி ஒன்பது அடித்து ஓய்ந்தது. - "மூர்த்தி அப்பா கூட ஊரில் இல்லை. பின் கட்டில் நான் மட்டும் தனியாகப் படுத்துத் துரங்க பயமாயிருக்குடா. முனியம்மா

27

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/29&oldid=1281563" இலிருந்து மீள்விக்கப்பட்டது