இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
"இப்ப பசி இல்லை. பசங்களோட பக்தியிலயே சேர்ந்து சாப்பிடறேன்' என்றான்.
பந்தி முடிய மணி பத்தாகிவிட்டது. பாகீரதி அடுப்படியில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தாள். மூர்த்தி இஷ்டமில்லாமல் பாயைக் கொண்டு போய் பின்கட்டுத் தாழ்வாரத்தில் போட்டுக் கொண்டான். கார்த்திகை மாதத்துக் குளிர் நிலவு முற்றமெங்கும்
29