பக்கம்:வேத வித்து.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருந்தாது. என்னை மறந்துடு பாகீ! இந்தத் தகாத உறவு வேணவே வேணாம்' "அப்பாவிடம் சொல்லிடமாட்டயே. எனக்கு பயமா யிருக்குடா சொல்லமாட்டேன்னு நீ சத்தியம் பண்ணிக்கொடுத் தாத்தான் நான் நிம்மதியாயிருப்பேன்." துக்கம் தொண்டைக் குழியில் சிக்கி, வார்த்தைகள் தடுமாறி வெளிவந்தன. அழுகையை அடக்க முடியாமல் தவித்தாள். "அழாதே பாகீ பசங்கள் யாராவது பார்க்கப் போறா! உள்ளே ப்ோய் சமையல் வேலையை கவனி. நேரமாச்சு." படி இறங்கினான். -

சீக்கிரம் வந்துடறயா?"

+ * * "...ம்... அமுது அழுது பாகீரதியின் முகம் விகாரமாய் வீங்கிப் போயிருந்தது. கண்கள் சிவந்து இரப்பைகள் உப்பலாகியிருந்தன. மணி பத்துக்கு மேல் ஆகியும் சமையல் வேலையில் நாட்டமின்றி'முர்த்தி வந்து விட்டானா?' என்று அடிக்கொருமுறை வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். காகங்கள் விடாமல் கத்திக் கொண்டிருந்தன. காக்கா கத்தினா யாராவது விருந்தாளி வருவான்னு சொல்வாளே! யார் வரப் போறா?...' பாகீரதி யோசித்தாள். ஏதிர்பாராது. விதமாய் வாசலில் குதிரை வண்டி ஒன்று வந்து கிற்க, அதிலிருந்து கைக்குழந்தை அம்புலுவோடு ஆக்கா கமலா இறங்குவதைக் கண்டதும் 'இவள் எதற்கு இப்போது இங்கே வந்து கிற்கிறாள்?' என்று ஆச்சரியப்பட்டாள்.

  • பலாப்பழம், புளிமுட்டை, பரங்கிக்காய், வாழைத்தார் எல்லாவற்றையும் வண்டிக்காரன் இறக்க, பாடசாலைப் பிள்ளை கள் அவற்றை ஏந்திக்கொண்டு போய் உக்கிராண அறையில் வைத்தார்கள்.

'வா, கமலா என்ன இப்படி திடீர்னு? காஞ்சீபுரத்தி லிருந்தா வறே? அப்பா வரலையா?" என்று கேட்டாள் பாகீரதி. "அப்பா வரத்துக்கு இன்னும் காலு நாள் ம். பெரியவா இருக்கச் சொல்லிட்டாளாம். அப்ப்ாதான் దవే

84

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/36&oldid=1281570" இலிருந்து மீள்விக்கப்பட்டது