பக்கம்:வேத வித்து.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தப் பெண்ணின் வாழ்க்கை இப்படி ஆகனுமா!' என்று விசாரப்பட்டாள். "என்னடி மல்லிப்பூ வாசனை வீசறது உன் தலையில்?...' "என் தலையிலா! அதுக்கெல்லாம் கான் கொடுத்து வைக்கலையே அக்கா சோப்பு ப்ோட்டு குளிச்சேன். ஒரு வேளை அந்த வாசனையாயிருக்கும்' என்றாள் பாகீரதி. "அதென்ன சோப்பு? இத்தனை வாசனையாயிருக்கே?" 'வினோலியா ஒய்ட் ரோஸ்' "ரோஸ்னா ரோஜாவாச்சே, இது மல்லி Թյց 3 65255r அடிக்கிறதே!' - கமலாவுக்கு ஏதே சந்தேகமாயிருந்தது. பாகீரதி சொன்ன பதில்களில் உண்மை இல்லை போல் தோன்றியது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தீட்சண்யமான பார்வையை அங்கும் இங்கும் செலுத்தியபடி, மூர்த்தி இப்ப வந்துடுவானோல் லயோ?" என்று கேட்டாள். - - தெரியலையே, மணி பன்னிரண்டாகப் போறதே! இன்னும் வரக் காணோமே" பாகீரதி கலங்கினாள். அவள் கண்களில் தவிப்பு தெரிந்தது. குரலில் சோகம் ஒலித்தது.

முர்த்தி வரவே இல்லை.

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/40&oldid=1281574" இலிருந்து மீள்விக்கப்பட்டது