ஏனாம்?" 'கேட்டனே? அதெல்லாம் சொல்ல முடியாதுன்னுட்டான். "இக்தா, இந்த திராட்சையையும் சமித்தையும் கனபாடிகளிடம் கொண்டுபோய்க் கொடுத்துடு. பச்சை திராட்சைன்னா அவருக்கு உயிர். வர வழிலே ஒரு பலாச மரத்தைப் பார்த்தேன். அதிலே நிறைய சமித்து கிடைச்சுது. என் வைதிக புத்தி கேட்கலே அவ்வளவையும் பறிச்சுண்டு வந்துட்டேன். தஞ்சாவூர் கடைத் தெருவில் திராட்சையைப் பார்த்ததும் கனபாடிகளுக்குப் பிடிக்குமேன் னு வாங்கிட்டேன். வாங்கினப்புறம்தான் இதை எதுக்கு வாங்கினோம்னு நினைச்சேன். இப்ப பாரு, தெய்வமே உன்னை இங்கே கொண்டுவிட்டது பார்த்தயா! நீ கொண்டு போய்க் கொடுத் துடு. இதைத்தான் மனசுங்கறது.' 'நீ ஏண்டா வந்துட்டே? அப்படி என்ன நடந்துட்டுது என்று திரும்பத் திரும்பக் கேட்டேன்." "அதுக்கு என்ன பதில் சொன்னான்?' என்று கேட்டாள் பாகீரதி.
- ஸுகார்த்தீ சேத் த்யஜேத்வித்யாம்’னு ஒரு சம்ஸ்கிருத சுலோகம் சொல்லி,
'வித்தியார்த்தி என்பவன் சுகம் காடுபவனாயிருக்கக் கூடாது. சுகம் காடுகிறவன் வித்தியார்த்தியாயிருக்கக் கூடாதுன்னு அதுக்கு அர்த்தமும் சொன்னான். 'நான் இப்ப சுகம் நாடும் வித்யார்த்தியாயிட்டேன். அதனால எனக்கு இனிமே படிப்பு ஓடாது. இதை குருவிடம் சொல்லுகிற அளவுக்கு தைரியம் வரலை. அதனாலதான் சொல்லாம வந்துட்டேன். என்னை மன்னிச்சுடச் சொல்லு என்றான். உனக்கெப்படிடா இந்த சுலோகமெல்லாம் தெரிஞ்சு துன்னு கேட்டேன். கனபாடிகளே சொல்லிக் கொடுத்ததுதான் என்றான்.' - "என்னைப் பத்தி ஏதாவது சொன்னானா ஒரு ஏக்கத்தோடு, குற்ற உணர்வோடு, ஆவல் நிறைந்த பார்வையோடு கேட்டாள் பாகீரதி. 'ஊஹயிம்; ஒண்ணுமே சொல்லலை.'
'il
41