பக்கம்:வேத வித்து.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போட்டு, வாழை இலை போட்டு பரிமாறினாl' என்ன சாப்டீங்க?" "காசி அல்வா, ரவாதோசை, தோசைக்கு கொத்சு, டிகிரி காப்பி...' 'வித்தியார்த்திகள் சுகம் நாடக் கூடாதுன்னு சொல்லிட்டு காசி அல்வா மட்டும் சாப்பிடலாமா? அது சுகம் இல்லையோ?" "அதென்னவோ, நீ அவனையே கேளு, வந்தால்..." "வருவான்னு நினைக்கிறயா கிட்டா நீ?" "தெரியலையே; ஒடிப் போனவனைப் பத்தி உனக்ன்ென இத்தனை கரிசனம் போனாப் போறான்!" 'மனசு கேக்கலைடா! அப்பா வந்தா என்ன பதில் சொல்வேன்? மூர்த்தி ஏன் போனான், எதுக்குப் போனான்? இங்கே என்ன நடந்ததுன்னு ஆயிரம் கேள்வி கேட்டு துளைச்சு எடுத் துடுவாரே குதிகுதின்னு குதிப்பாரே!' என்று பயந்து நடுங்கினாள் பாகீரதி. - இவ்வளவையும் காதைத் தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்த கமலா இதில் என்னமோ மர்மம் இருக்கு' என்று தனக்குத்தானே தலையசைத்து ஆமோதித்துக் கொண்டாள். நாள் காலை. கனபாடிகள் வரும்போது கூடத்து به LD அழுக்கு கடிகாரத்தில் மணி ஒன்பதுக்கு மேல் ஆகியிருந்தது. புதுசாக சிவப்பு காஷ்மீர் சால்வை போர்த்தியிருந்தார். காதில் கடுக்கனும், கழுத்தில் ருத்திராட்சமும், பட்டை பட்டையாக விபூதியும் அணிந்து ஆசாரசீலராய்க் காட்சியளித்தார். வாசல் திண்ணையில் அவர் வரவை எதிர்நோக்கி யார் யாரோ காத்திருந்தார்கள். கனபாடிகள் வந்து விட்டார் என்று தெரிந்ததும் பாடசாலை ஒரு முறை சிலிர்த்துக் கொண்டது! -

44

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/46&oldid=1281580" இலிருந்து மீள்விக்கப்பட்டது