பக்கம்:வேத வித்து.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி முலையாக ஒரு இடம். கழைக்கூத்தாடி ஒருவன் கண்களை இடுக்கி, டமாரம் தட்டி, விசில் அடித்து ஹா. ஹா, ஹா' என்று கூவிக் கூட்டம் சேர்த்துக் கொண்டிருந்தான். அந்த ஒசைக்கு பயந்த மரத்தடி நாய் ஒன்று அலறி அடித்து ஓடியது. அடுத்த சில கிமிடங்களில் அங்கே வந்து சூழ்ந்த பெரும் கூட்டம் வட்டமடித்து கிற்க, ரயிலடி அழுக்குப் பையன்கள் மரத்தின்மீது அவசரமாக ஏறி ஆளுக்கொரு இடம் பிடித்துக் கொண்டனர். சுற்றி கின்ற கூட்டத்தில் மூர்த்தியும் ஒருவன். கறுப்பான எள் குவியலுக்கு இடையே வெண்மையான பச்சரிசி ஒன்று கலந்ததுபோல் அந்தப் பாமர மக்கள் கூட்டத்தில் அவன் சற்றும் பொருந்தாமல் கின்றான். கழுத்துச் சங்கிலியை அப்பா வாங்கிக் கொடுத்த லேச் சட்டை போட்டு மறைத்திருந்தான். கையில் மான் தோல் பை. இப்படியும் அப்படியும் ஒதுங்கிக் கூட்டத்தின் இடுக்கு வழியாகப் பார்த்தபோது அந்தக் கழைக்கூத்தாடிப் பெண் மஞ்சு கவர்ச்சியாய்த் தெரிந்தாள்.

55

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/57&oldid=1281591" இலிருந்து மீள்விக்கப்பட்டது