பக்கம்:வேத வித்து.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஞ்சு அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, 'வெள்ளத்தில் முழுகின ஆளில்ல !ே இங்க எங்க வந்தே?' என்று கேட்டாள். " உன்னைப் பார்க்கத்தான்.' "முதல்ல இந்த பர்ஸை வாங்கிக்க; வித்தை முடிஞ்சதும் பேசலாம்!" ാ வானம் இருண்டு எந்த கிமிடத்திலும் மழை வரும்போல் ஒரு சூழ்நிலை உருவாகி, புழுதிக்காற்று வீசவும் கூட்டம் மளமளவென்று கலையத் தொடங்கிற்று. வசூல் போச்சே' என்ற ஏமாற்றத்தில் கிழவன் முகம் கறுக்க அவசரமாக “தருமவான்களே, தாய்மார்களே!' என்று டால்டா டப்பாவைக் குலுக்கிக்கொண்டு ஓடினான். இதற்குள் இடியும் மின்னலுமாய்ப் பேய் மழை கொட்டத் தொடங்கவே அத்தனை கூட்டமும் ஸ்டேஷனுக்குள் புகுந்து விட்டது. மழையில் தெப்பலாய் நனைந்து நின்ற மஞ்சுவைத் தொடர்ந்து முர்த்தியும் போய் கின்றான். ‘'வேற சட்டை வச்சிருக்கியா?" என்று கேட்டாள் மஞ்சு, 'இல்ல...' "ராத்திரி எங்க தங்கப்போறே?" "உன்னைத் தேடிக்கொண்டுதான் வந்தேன். தேடப் போன மருந்து காலிலே சிக்கின மாதிரி நீ இங்கயே கிடைச்சுட்டே' "முதல்ல தலையைத் துவட்டிக்கோ, இந்தா டவல் மழை கின்னதும் ராஜா சத்திரம் போலாம். அங்கதான் நானும் . அப்பாவும் தங்கியிருக்கோம்.'

இது யார்? உங்கப்பாவா?"

"ஆமாம்; வயசாயிட்டுது. வரவர கண்ணும் தெரியலே; காதும் கேட்கலே. கய்னா! நான் சொன்னனே... ஆத்துல ஒருத்தர் முழுகிட்டார்னு இவர்தான் அது'

57

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/59&oldid=1281593" இலிருந்து மீள்விக்கப்பட்டது