பக்கம்:வேத வித்து.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை கவியரசு வைரமுத்து நாணலைப் பார்த்து நதி முன்னுரை கேட்குமா? கேட்டிருக்கிறதே? இதோ என்னிடம் சாவி. இந்த "வேத வித்து" என்னும் வசன காவியத்துக்கு முதல் வாசகன் நான் என்பதனால் முனனுரை எழுதச் சம்மதித்தேன். இந்த நாவலை நான் வாசித்தேன் என்பது பொய். இந்த நாவலுக்குள் நான் வசித்தேன் என்பதே மெய். மூர்த்தியோடு அந்தப் படித்துறையில் நடந்து அவன் கழுத்தில் ஆடும் தங்கச் சங்கிலியாய்க் கிடந்து, பாகீரதியின் விதவைக் கூந்தலில் ஒரு மல்லிகைப் பூவாய் மணத்து, கனபாடிகளின் மந்திர உச்சாடனத்தில் நானும் ஒரு வார்த்தையாய் ஒலித்து, மஞ்சுவின் கழைக் கூத்தாடிக் கயிற்றில் நானும் நடந்து, கனபாடிகளின் மரணத்தின் போது கொட்டும் மழையில் நானும் ஒரு துளியாகி... 2....? இந்த நாவலை நான் வாசிக்கவில்லை. இந்த நாவலுக்குள் நான் வசித்திருக்கிறேன். சாவி அவர்கள் எழுதத் தொடங்கினால் அவர் கையிலிருக்கும் பேனா துாரிகையாவது வழக்கம். - ஆனால், வழக்கத்துக்கு மாறாய் வேதவித்து எழுதப் போன அவர் பேனா உளியாகியிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/6&oldid=918859" இலிருந்து மீள்விக்கப்பட்டது