பக்கம்:வேத வித்து.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கினபாடிகள் வாசலுக்கு வந்தபோது அவர்கள் எல்லோ ரும் பவ்யமாக எழுந்து கின்றார்கள். 'பக்கத்துர்லேந்து வறோம்' என்றார் ஒருவர். அப்படிச் சொன்னவரைப் பார்த்து, "நீ வெங்கடேச தீட்சிதர் பிள்ளை இல்லையோ? உன்னைப் பார்த்திருக்கேன். இத்தனை பேரும் எங்க இந்த வெய்யில் வேளையில?...' ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். வெங்கடேச தீட்சிதர் மகன்தான் பேசினார் : "ஒரு முக்கியமான விஷயம். சாஸ்திரப் பிரச்னை, நீங்கதான் முடிவு சொல்லணும். அந்தத் தகுதி உங்களுக்குத் தான் உண்டு." "பூர்வ பீடிகையெல்லாம் பலம இருக்கே. விஷயத்தைச் சொல்லுங்கோ' என்றார் கனபாடிகள். "அத்திப்பட்டு ராமகிருஷ்ண சாஸ்திரிகள்னு கேள்விப் பட்டிருப்பேள்' "கன்னாத் தெரியுமே; அவர் க | ல ம | யி ட் டார் இல்லையோ?" - "ஆமாம். அவருக்கு ஒரு பெண். பார்வதின்னு பேர். கல்யாணமாகி இருபது வருஷம் ஆறது. அவளுடைய புருஷன் கல்யாணமான ரெண்டு வருஷத்துக்கெல்லாம் கடல் கடந்து பினாங்கு போனவன் இப்பத்தான் திரும்பி வந்திருக்கான். பார்வதி இத்தனை நாஞ்ம் பட்டணத்திலே யாரோ ஒரு பணக் காரர் வீட்டிலே சமைச்சுப் போட்டுண்டு காலத்தைக் கழிச்சுண் டிருந்தா. இந்த வருஷம்தான் ஊரோட வந்து சேர்ந்துட்டா. குழந்தை குட்டி கிடையாது." 'சரி, விஷயத்துக்கு வாங்க." காஃ. இப்ப அவள் புருஷன் எங்கிருந்தோ வந்து 'அப்புறம்?...'

65

65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/67&oldid=1281601" இலிருந்து மீள்விக்கப்பட்டது