பக்கம்:வேத வித்து.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனபாடிகள் அவமானத்தால் குன்றிப் போய், மனம் கொந்து தலை குனிந்து பெருமூச்சு விட்டபடி ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார். அப்போது பாகீரதி அவர் அருகில் வந்து நின்றாள். "என்னாலதானே அப்பா உங்களுக்கு இந்த அவமான மெல்லாம்?' அவர் வேதனையோடு அவளைப் பார்த்தார். அவள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவள் போல் ஒரு விரக்தியோடு, ஒரு துணிச்சலோடு நிமிர்ந்து நின்றாள். 'சாஸ்திர விரோதமான, சமூகம் ஏற்றுக்கொள்ளாத இந்தக் கூந்தல் எனக்கு வேணாம். இன்னைக்கு வெள்ளிக் கிழமை. காளைக்கே இதை...' - மேலே பேசமுடியாமல் அவள் கெஞ்சுக் குழியில் துக்கம் அணை போட்டது. -

71

71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/73&oldid=1281607" இலிருந்து மீள்விக்கப்பட்டது