பக்கம்:வேத வித்து.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'துரங்கறது. ாைலு காளாச்சு வந்து ஊருக்குப் போகணும்னு சொல்லிண்டேதான் இருக்கேன். இதுக்குள்ள என்னென்னவோ குழப்பம்' "என்ன குழப்பம்?’’ என்னவோ ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லே!" அதைத் தெரிந்துகொள்வதில் அத்தை அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அப்புறம் கிதானமாக விசாரித்துக் கொள்ளலாம் என எண்ணி அண்ணா எங்கே?' என்று கேட்டுக் கொண்டே பின்கட்டுப் பக்கம் கடந்தாள். அங்கே கனபாடிகள் சிவப்பழமாய் உட்கார்ந்து கண்களை முடி ஜபம் செய்துகொண்டிருப்பதைப் பார்த்ததும் திரும்பி வந்தாள் . - 'என்ன அத்தை அத்தி பூத்திாப்பல' என்றாள் கமலா. 'பரண்டை கொண்டு வந்திருக்கனே, பார்க்கலையா? இன்னும் ரெண்டு நாள்ல உங்க பாட்டிக்கு திவசம் வரப் போறது.டி. ஒரு திவசத் துக்காவது வராம இருந்திருக்கனோ?' 'உங்க அம்மாவுக்குன்னு சொல்லு. இது மாசி மாசம்கறது மறந்தே போச்சு. பாட்டியோட திதி இப்பத்தாள் வர வழக்கம். அப்பாவுக்கு ஞாபகம் இல்லையோ, என்னவோ!' - 'பாவம், அவனுக்கு எத்தனையோ கவலை மறக் திருப்பான்!" கனபாடிகள் ஜபத்தை முடித்துக்கொண்டு ஆசமனம் செய்துவிட்டு வந்தபோது "க்ெள்ரி அத்தை வந்திருக்கா! பார்த்தேளா, அப்பா' என்றாள் கமலா. . "கணிச்னு குரல் கேட்டுது வெண்கலக் குரலாச்சே! எங்கே அவள்?' என்று கேட்டார் கனபாடிகள். "புதுக் கன்னுக்குட்டியைப் பார்க்கப் போயிருக்கா' என்றாள் கமலா . - கனபாடிகள் தொழுவத்துக்குப் போய் 'வா, கெளரி அவர் செளக்கியமா? நல்ல வேளை! நீ வந்தே; இல்லேன்னா அம்மாவை மறந்தே போயிருப்பேன். என்னைக்கு சிராத்தம்?

73

73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/75&oldid=1281609" இலிருந்து மீள்விக்கப்பட்டது