நன்றிக்கடனா அவர் அவனுக்குத் தன் வீட்டுத் தோட்டத்துல வைத்து சாப்பாடு போட்டிருக்கார். அது பெரிய பாவமாம்! அதுக்காக திவசத்தை நடத்த முடியாமத் தடுத்துட்டா. மணி பத்தாச்சு, பன்னிரண்டாச்சு, ஒண்ணாச்சு- சொல்லி வெச்சிருந்த பிராமணாள் யாருமே வரலை. ஐயர்வாள் கலங்கிக் கண்ணிர் வடிச்சு, மனம் உருகி தெய்வத்தைப் பிரார்த்தனை பண்ணிண்டார். அதனால ஆண்டவனே பிராமணர்கள் ருபமா அவர் வீட்டுக்குள் பிரத்யட்சமாகி திவசத்தை கடத்தி வச்சட்டுப் போயிட்டார். வீட்டைச் சுத்தி காவல் காத்துண்டிருந்தவாளுக்கு ஒரே ஆச்சரியம்l அவர்கள் மட்டும் எப்படி உள்ளே போனான்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து விழிச்சுண்டு கின்னா பகவானை யாரால தடுக்க முடியும்? இவர்கள் கண்ணுக்கு அவன் தெரிவானா? உண்மையா கடந்தது. இது. இன்னைக்கும் ஒவ்வொரு கார்த்தி மா சமும் திருவிசை கல்லூர் ல கார்த்திசுை அமாவாசை தொடங்கி பத்து நாள் தடபுடலா உற்சவம் கடக்கிறது. பாம்பு பஞ்சாங்கத்தை வேனுமானா எடுத்துப் பார். அதில் கார்த்திகை அமாவாசை 9 திருவிசைகல்லூர் ரீதர ஐயர் வாள் உற்சவம்னு போட்டிருக்கும்" எனறாா, 'இந்தக் கலியுகத்துலகூட இப்படியெல்லாம் கடக்கிறதா என்ன? கம்ப முடியலையே' என்றாள் கெளரி. 'கடந்திருக்கே! சமீபத்துலதான். இருநூறு வருஷம்கூட ஆகல்லே...' "அந்த மாதிரியெல்லாம் இப்ப நடக்காது. கலி முத்திப் போச்சு. பேசாம நாளைக்கே இரண்டு பேரும் சிதம்பரத்துக்குக் கிளம்பிப் போய் காதும் காதும் வெச்சாப்பல திவசத்தை முடிச்சுடலாம், வா' என்றாள் கெளரி. "ஒருவேளை இவா சிதம்பரத்துக்கும் வந்து கலகம் பண்ணுவாளோ, என்னவோ...?' "இவா ஜம்பமெல்லாம் அங்கே சாயாது. எங்க பேச்சை யாரும் தட்டமாட்டா' என்றாள் கெளரி. -
82
82