பக்கம்:வேத வித்து.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்தப் பாத்திரத்தின் மீதும் வெறுப்பு வராமல் அத்தனை பாத்திரங்களையும் நேசிக்கிற பாத்திரங்களாய் வார்த்திருப்பது நாவ லைச் சுவைத்து விட்டு அசை போடும் போது சுகமாக இருக்கிறது. கனபாடிகளின் மரணத்தை இதைவிடச் சுருக்கமான வார்த்தை களால் சொல்ல முடியுமா? "அந்த அணில் குஞ்சு கனபாடிகள் இறந்து போனது தெரியாமல் அவர் மீது ஒடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தது." இந்த வரியை வாசித்துக் கொண்டிருந்த போது அந்த அணில் வால் துடித்தது மாதிரி இருதயம் துடித்தது. அவர் எழுதிய அந்தக் கடைசிக்கடிதம் வேதங்களையும் நிகழ் காலத்தையும் இணைத்து வைக்கிற எழுத்துப் பாலமாகவே எனக்குப் பட்டது. நாவல் முடியும் போது "அய்யோ! சாவி எவ்வளவு பெரிய ஆள்" என்று உதடு உச்சரித்துக் கொண்டது. இதில் ஒரு குறிப்பு வருகிறது. விராட பர்வம் படித்தால் மழை வருமாம், எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால்,வேதவித்து ஒரு விராட பர்வம்தான். இதைப் படித்தால் மழை வரும் - கண்ணில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/9&oldid=918924" இலிருந்து மீள்விக்கப்பட்டது