பக்கம்:வேத வித்து.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிட்டா வழக்கமில்லாத வழக்கம்ாய் காலையிலிருந்தே ரொம்ப உற்சாகமாய்க் காணப்பட்டான். கனபாடிகளிடம் பழகியிருந்த பர்த்ருஹரி சுலோகங்களை தன்யாசி ராகத்தில் சேதப்படுத்திக் கொண்டிருந்தான்! பாகீரதி சமையல் வேலையை மறந்து, உக்கிராண அறையில்போய் உட்கார்ந்து, மூர்த்தியின் தகரப் பெட்டியைத் திறந்து வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தாள். பழைய பட்டு வேட்டி, திருக்குறள் புத்தகம், பகவத்பாதாள் சரிதம், காசி மடம் விபூதிப்பை, தக்ளி, முள் ஒடிந்த பேனா, செல்லாத அரையனாக் காசு-இவ்வளவும் அதில் கிடந்தன. திருக்குறள் புத்தகத்தின் முதல் பக்கத்தில் 'அப்பா வாங்கிக் கொடுத்த தமிழ் வேதம்' என்று எழுதி அதன் கீழ் முர்த்தி என்று கையெழுத்திடப்பட்டிருந்தது. - பட்டு வேட்டியையும், திருக்குறளையும் மட்டும் எடுத்து வைத்துக் கொண்ட பாகீரதி பெட்டியைப் ப்ழையபடி முடி அது இருந்த இடத்திலேயே கொண்டு வைத்துவிட்டாள். அந்தப் பட்டு வேட்டியில் அவளுக்கு முர்த்தி வாசன்ை தெரிந்தது. திருக்குறள் புத்தகத்தில் எழுமை யெழுபிறப்பு’ என்று தொடங்கும் வரிகளைக் கோடிட்டு வைத்திருந்தான். மூர்த்தியைப் பாடசாலையில் சேர்க்க வந்தபோது அவன் அப்பா "நீ வேதம் ஒதப் போகிறாய். சம்ஸ்கிருதம் படிக்கப் போகிறாய். ஆனாலும் தமிழை மறந்து விடாதே. தமிழ் மறந்து போகாமலிருக்க தினமும் ஒரு குறளாவது படித்துக் கொண்டிரு. இக்தா, இது தமிழ் வேதம்' என்று சொல்லிக் கொடுத்துவிட்டுப்போன புத்தகம் அது. பாகீரதி பழுப்புத்தாள் ஒன்று எடுத்து வந்து அதற்கு அட்டை போட்டு, உள் பக்கமாக முலை மடித்து ஒட்டி முடித்தாள். கிட்டா இன்னமும் குஷியாகப் பாடிக்கொண்டிருந்தான். 'என்னடா, என்றைக்குமில்லாத குவி' என்று கேட்டாள் பாகீரதி.

90

90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/92&oldid=1281626" இலிருந்து மீள்விக்கப்பட்டது