பக்கம்:வேத வித்து.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடசாலையை மறந்து, வேதத்தைத் துறந்து, தஞ்சைக்குப் புறப்பட்டு வந்த மூர்த்தி இங்கே வந்தபின் எந்த முடிவுக்கும் வர முடியாமல் சஞ்சலப்பட்டான். மஞ்சு அழகாக இருந்தாள். இவனிடம் அளவு கடந்த பற்றும் பாசமும் காட்டினாள். ஆயினும் மூர்த்தி மட்டும் அவளிடம் ஒட்டுறவு ஏதுமின்றி, தாமரை இலைத் தண்ணிர்போல் பழகிக் கொண்டிருந்தான். - 'மஞ்சு, நீ என்னை வெள்ளத்திலேருந்து மீட்கலேன்னா நான் அன்னைக்கே செத்துப் போயிருப்பேன். அதுக்காக உனக்கு நன்றி சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். நீ என்மீது வெச்சிருக்கும் உண்மையான அன்பைப் பார்த்தப்புறம் உன்னோடயே தங்கிடலாம்னு தோணித்து. தங்கிட்டேன். ஆனாலும் என்னோட ஆசாரம், அனுஷ்டானம், வேதம் இவ்ளவும் உனக்கும் எனக்கும் நடுவே குறுக்குச் சுவர் போட்டிருக்கு. உன்னைத் தொடவோ, நீ சமைத்துப் போடுவதைச் சாப்பிடவோ, மனசு ஒப்பலை. நீயோ என்னைப் பெரிசா கம்பிண்டிருக்கே. கான்தான் ஒண்னும் புரியாம குழம்பிண்டிருக்கேன்' என்றான் மூர்த்தி. 'உன்னை நம்பிப் பெரிய மனக்கோட்டையெல்லாம் கட்டிட்டேன். நீ குடுமியை எடுக்காம நாளைக்கடத்தறதிலிருந்தே சந்தேகப் பட்டேன் .

96

96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/98&oldid=1281632" இலிருந்து மீள்விக்கப்பட்டது