பக்கம்:வேனில் விழா.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 (). எடுபிடி

போ தம்பி!......அாமனைப் பக்கம் மெள்ளப் போகனும், போலீஸ்காரங்க நிற்பாங்க. உன் கை வரிசையைக் காண் பித்துப் பெடலே அழுத்தினுல், உன்னை மட்டும் சார்ஜ் பண்ணமாட்டாங்க, அப்பாலே எங்க சைக்கிள் வண்டிக்கும் ஆபத்து வந்துவிடும். அதுக்காகத்தான் இப்பிடிப் படிச்சுப் படிச்சுச் சொல்லறேனுக்கும்!” என்றான் அவன்.

அவன் சொல்லி கிறுத்தினபோது, சிரிப்புச் சத்தம் வெடித்தது.

கடை முதலாளி கிருஷ்ணன் தான் சிரித்தது. **sf, சாரதி’ என் ருன் கிருஷ்ணன்.

    • gr πιρπςό !"”

“கொஞ்சமுக்தி தம்பிண்ணு சொன்னியே, அந்தப் பையனப் பார்த்து. நீ என்ன பெரிய ஆம்பளை ஆகி. விட்டாயா? என் தலை மறைந்ததும் உ வாய் திறந்து விடுகிறது என்று வாடிக்கைக்காரர்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. சரி, இங்கே வாடா!’

கிருஷ்ணன் உட்காரவேண்டிய ஆசனத்தில் ஆயில் கான் இருந்தது. அவசரமாக ஓடிய பையன் அதை எடுத்துத் தரையில் வைத்தான். பிறகு, வினயமாக அண்டி கின்றான். .. - - --

“என்னுங்க...?”

‘சாத்தனர் கோயில் மார்க்கெட்டுக்கு ஓடி புதினுக் கீரையும், பச்சைக் கொத்துமல்லித் தழையும் வாங்கிக் கொடு. கேற்று நீ அதை வாங்கிப் போகாததால், உன் பேரில் பூங்காவனத்துக்கு அசாத்தியக் கோபம். அப்படியே, பாப்பாவுக்கு ரொட்டிக் கட்டு ஒன்றும் வாங்கிப் போ. கல்லாப் பெட்டியிலிருந்து ரெண்டு ரூபாய் எடுத்துக் கொண்டு போ. பேர்னகால் வந்தகால் தெரியாமல் ஓடி வரவேண்டும்!” - - - --

ஒன்பது அடித்தது கடியாரம். காற்று அடிக்கவேண்டும்’ என்று ஒருவர் வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/101&oldid=684261" இலிருந்து மீள்விக்கப்பட்டது