பக்கம்:வேனில் விழா.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

02 எடுபிடி

தான். “இருடா,’ என்று சொல்லி பூங்காவனம் பாலும் கையுமாக வந்தாள். தன் யஜமான் பாலச் சாப்பிட்டபின் வெற்றிலே போட்டுக்கொண்ட்தும், சாரதி கேட்டான்: “ஏங்க் முதலாளி, உங்க அப்பா அம்மா இங்கே வரமாட் டாங்களா?”

கிருஷ்ணனுக்கு முகம் மாறியது. சி! போடா, தூங் குடா” என்று அந்தப பயல் முதுகில் ஒரு தட்டுத்தட்டி விரட்டி விட்டான்.

தன் பெற்றாேரைப் பற்றி நினைவு வந்ததும் கிருஷ்ண் னுக்கு ஆத்திரம் கிளர்ந்தெழுந்தது. ‘சீ! அப்பாவா அவர்? என்று கிருஷ்ணன் முணுமுணுததான.

நாட்கள் பல சென்றன.

ஒரு நாள் இரவு, சாரதி சாப்பிடவும் வரவில்லை. படுக்க வும் வீரவில்லை. மறுநாள் காலையில் கிருஷ்ணன் அவனே வினவிஞன், முந்தின நாள் ஏன் வரவில்லையென்பதை.

வடக்கு தெருவிலே என் உறவுக்காரர் வீட்டுக்கு, கிராமத்திலிருந்து இன் அப்பன் வந்திருக்குது. அதனுல்ே அவுங்க வீட்டிலேயே சர்ப்பிட்டுத் துரங்கிப்பிட்டேனுங்க!” என்று காரணம் தெரிவித்தான் சாரதி. .

அதற்கப்புறம் சாரதி கிருஷ்ணன் வீட்டில் சாப்பிடு வதோ, படுப்பதோ இல்லை. மாதாமாதம் காற்பது ரூபாய் கள்ேயாக வாங்கிச் செல்லத் தொடங்கின்ை அவன்.

அன்றைக்கு வெள்ளிக்கிழமை. சங்தை தினம்; கிராக் கிகள் அதிகம் வரும் நாளும்கூட!

மணி ஒன்பதாயிற்று. பத்தாயிற்று. எடுபிடிப் பையன் சாரதியைக் காணுேம்! கடைக்கு வரவில்லே அவன். அவன் அன்றுவரை நித்தமும் ஒழுங்காக வந்ததால், அவனுடைய தியான விலாசத்தைக் கேட்டுவைக்கவில்லை. -

சரியாக உச்சிப் பொழுதிருக்கும்.

எசமான்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/103&oldid=684263" இலிருந்து மீள்விக்கப்பட்டது