பக்கம்:வேனில் விழா.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 103

விம்மி வெடித்து கின்றான் சாரதி, கண்களில் ரத்தச் சிவிப்பு உடை பூராவும் ஒரே அழுக்கு விரிந்து கிடந்தது தலை,

அவனை இழுத்து அறைந்துவிடத் துடித்தன கிருஷ்ண னின் கைகள். ஆனல் பையனின் தோற்றம் அவனது ஆத்திரத்துக்கு அணை போட்டது.

‘ஏண்டா, என்ன கேடு உனக்கு?”

‘எனக்கு இல்லீங்க. எங்க அப்பாவுக்கு!”

‘பணம் வேணுமா?”

“இ மேல் அது தேவையில்லீங்க!” - “ஏண்டா?” கிருஷ்ணனுக்கும் பையன்மேல் அன்பு பொங்கியது.

“அவருக்கு கிலேமை மிஞ்சிப்போச்சுங்க! ஆளுல் உங்களே ஒருதரம் கண்ணுலே பார்க்கத் துடிக்கிருருங்க. தனக்கும் தன் பிள்ளைக்கும் சோறுபோட்டுப் படியளந்த புண்ணியவான் நீங்களாம். அதாலே உங்களைக் காண வேனுமாம்! வருகிறீங்களா, யசமான் ...பெரிய மனசு பண் ணுங்க தர்மப் பிரபுவே!”

சாரதி கதறியழுது, கிருஷ்ணனின் பாதங்களில் சாய்க் தான்.

‘எழுந்திருப்பா வா, போகலாம்!”

சிறுவன் சாரதி காட்டிய இடம் ஒரு பழைய சத்திரம் ஆஞல், அங்கே அவன் அப்பா இல்லை. மலைத்து கின்றான்"ஐயையோ, எங்கப்பா எங்கே போனார்களோ? தெய்வமே!” என்று அலறிஞன். சிதறிக் கிடந்த பையையும் சாமான் களையும் மிதித்துக்கொண்டே அங்குமிங்கும் பார்த்தான். அவன் கண்கள் கிரம்பி வழிந்தது.

  • சரி, வா. நம்ப வீட்டுக்குப்போய் ரெண்டுபேரும் சப்பிட்டுவிட்டு உன் அப்பாவைத் தேடலாம்!”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/104&oldid=684264" இலிருந்து மீள்விக்கப்பட்டது