பக்கம்:வேனில் விழா.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 எடுபிடி

“ஊஹூம் எங்க அப்பாவைக் காணும, நான் ஒரு பருக்கைக.டச் சாப்பிடமாட்டேனுங்க!”

  • சரி, வீட்டுக்குப் போகலாம் வா. நான் சாப்பிட்டு, அப்புறம் உன்னேடு அலைகிறேன்!”
  • நல்லதுங்க, எசமான்!” கிருஷ்ணனைப் பின்தொடர்ந்தான் சிறுவன். தன் வீட்டை அ டைந்ததும், வெளிமுகப்பில் ஒருகணம் நிலத்து கின்றான் கிருஷ்ணன். அவனது செவிகளில் பேச் சரவம் கேட்டது.
  • இப்போதுதான் என் மனசு கிம்மதியடைஞ்சுது என் னுடைய பேத்தியைக் கடைசி காலத்திலாவது காண முடிங் ததே தெய்வச் செயல்தான்! அம்மா பூங்காவனம், நான் சாவதற்குள்ளே நான் பெற்ற மகனே ஒருதரமாவது காண வேணும்னு ஆசையா இருக்கிறது. அதற்குச் சம்மதிக்கும் படி கிருஷ்ணன் மனசை மாற்றுவாயா? உன்னைக் கல்யா ணம் செய்து கொள்கிற விஷயத்தில் அவனுக்கு கான் தடை போட்டதில்தான் அவனுக்கும் எனக்கும் விரோதமாகி விட்டது. உன் மனசுப்படி முக்தித்தான் நான் கடக்க ஒப் பலே. உன் அப்பன் செஞ்ச தீவினைக்காக உன்னை வெறுத்து விட்டேன். மன்னிச்சிடும்மா!...உன் விருப்பப் பிரகாரம் நீ நீட்டின கஞ்சியையும் குடிக்கிறேம்மா. ஊற்றிக் கொடு, பூங்காவனம். என் மருமகள் கையாலே கொடுக்கி றதை கடைசி காலத்திலேயாவது குடிச்சாத்தான் என் ஆவி அடங்கும். ஆமாம்மா!”

ஆத்திரம் புயல் வீசிய மனத்துடன் உள்ளே ஓடினன் கிருஷ்ணன்,

அங்கே கூடத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்தார் கிருஷ்ணனின் தந்தை சிவசாமி. - -

தந்தையின் அவலக் கோலம் அவனுடைய சினத் தீயை அவித்துவிட்டதா? அப்பா என்று நெஞ்சு விம்மி யது. வார்த்தைகள் மட்டும் வெளிக் கிளம்ப மறுத்தன.

அதுசமயம் உள்ளே வந்தான் சாரதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/105&oldid=684265" இலிருந்து மீள்விக்கப்பட்டது