பக்கம்:வேனில் விழா.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 05

“அப்பா! நீங்க வந்து சேரவேண்டிய இடத்துக்கே வந்துவிட்டிங்களா?” என்று கேட்டுக்கொண்டே சிவ சாமியை இறுகக் கட்டிக்கொண்டான்.

கிருஷ்ணனுக்கு வியர்த்துக் கொட்டியது. நெஞ்சு விம்மியது.

“ அப்பா! அப்பா!’

சிறுவன் சாரதியும் விம்மியழுதான்.

‘எசமான், என்ன அப்படிப் பார்க்கிறீங்க? அப்பா இல்லை என்று சொன்னேனே என்று பார்க்கிறீங்களா? என் அப்பா இவரே தான். இந்த ஊருக்கு முதன் முதலிலே நான் வந்தபோது, பசியாலே துடிச்ச எனக்கு பஸ் ஸ்டாண்டுக் கிளப்புக் கடையிலே சோறு வாங்கிப் போட்ட தெய்வம் இவர்களேதான்!...அப்பன் ஆயி முகத்தைக் கூட கண்டறி யாத காதியில்லாத இந்த ஏழைப் புள்ளேக்கு இவுங்களே தான் அப்பாவாக இருந்தாங்க!...உங்க படத்தையே வச்சுக் கிட்டு சதா கண்ணிர் வடிப்படங்க. நீங்க இவரை மதிக்கா ததை கினேச்சு வேதனை தாளாமல் துடிச்சுப் போயிட்டாங்க. அந்த மனத் தெ ல்லைதான் இவங்களைப் படுக்கையிலே கிடத்திவிட்டதுங்க!...நான் உங்ககிட்டே அலுவல் பார்த் துக்கிட்டிருந்ததைச் சொன் னு, எங்கே நான் சம்பாதிக்கிற பணத்தை ஏற்கமாட்டாங்களோண்ணு பயந்துதான் வேறே ஒரு இடத்திலே வேலை பார்க்கிறதாகப் பொய் சொல்லி வக் தேன். சாவதற்குள்ளாக, உங்க முகத்தைக் காணத் தவம் இருந்தாங்க. அதனுலேதான், என்னவெல்லாமோ சொல்லி உங்களை அழைத்துக்கிட்டுப் போனேனுங்க. எசமான்!. இவங்களே அப்பாண்ணு ஒருதரம் கூப்பிடுங்க!...கடப்பிடுங்க அண்ணுச்சி!”

பாதங்களில் கிடந்தான் சாரதி.

அைப்பா! அப்பா!’ என்று அலறிஞன் கிருஷ்ணன்.

கிழவர் சிவசாமி ஆனந்தக் கண்ணிர் சொரிந்தார். எழுந்து அமர்ந்தார். உயிர்ச்சிரிப்பைக் கொட்டினர்; மகனது முகத்தைத் தடவிக் கொடுததார்; மைந்தனின்

7 . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/106&oldid=684266" இலிருந்து மீள்விக்கப்பட்டது