பக்கம்:வேனில் விழா.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவணத்தாங் கோட்டைச்


சாலை

ஆவணத்தாங் கோட்டை மணியக்காரர் வீட்டுத் தின் னேயில் தொங்கிக்கொண் டிருந்த காலணடரில் அன றைக்கு ஞாயிற்றுக்கிழமை எனறு காள் காட்டிக்கொண் டிருந்தது. அங்த ஞாயிற்றுக்கிழமையைத்தானே பூவம்மா வும் ஆசை துள்ள, ஆனந்தம் பொங்க எதிர்நோக்கிக் கொண்டிருக்தாள் அன்றுதான் கடல் கடந்து சென்ற மருதமுத்து பிறந்த மண்ணை மிதிப்பதாகத் தபால் போட்டி ருந்தான்.

- தாய்க்கும் மகளுக்கும் நாளெல்லாம் வரப்போகும் மருத முத்துவைப் பற்றிய பேச்சுத்தான் மூச்சாக இருந்தது. இருக்காதா பின்னே...?

பூவம்மாவுக்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. அடிக் கொருதரம் அவள் மனம் “அண்ணுச்சி-அண்ணுச்சி: என்று பஜனை பாடிக்கொண் டிருந்தது. அவள் இதயத் திரையில் மனம் அவளது உடன்பிறந்தானப் படமாக வரைந்து சட்டிக்கொண்டிருந்தது.

“பூவம்மா, ஓடிவா இங்கே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/108&oldid=684268" இலிருந்து மீள்விக்கப்பட்டது