பக்கம்:வேனில் விழா.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 08 ஆவணத்தாங் கோட்டைச் சாலை

“அண்ணுச்சி வந்துடுச்சா, ஆயா?” என்று கேட்ட வாறே தோட்டத்தைத் தாண்டி வெளியே வந்தாள் பூவம்மா. வாசலில் மாட்டு வண்டி கின்றது. துள்ளும் உள்ளத்துடன் ஓடினுள்.

ஆனல் அவள் தன் அண்ணனைத் தரிசிக்கவில்லை. யாரோ ஓர் இளைஞன் காட்சியளித்தான். அவனது விழி கள் பூவம்மாவைச் சுற்றி முற்றுகையிட்டன. அவள் பூவிழி கள் தரையை நோக்கித் தாழ்ந்தன.

“பூவம்மா, உன் அண்ணன் அடுத்த மாசம்தான் வருகி ருளும். இப்ப இவங்களோட அவன் வர முடியல்லியாம். கப்பல் பதிவுச் சீட்டுக்கு உத்தரவு ஆகலேயாம். இவங்க கிட்ட சேதி சொல்லி அனுப்பிச்சிருக்கு...” என்று கிழவி மகளிடம் விஷயத்தை ஒருவாறு விளக்கினுள். உடனே எனன நினைத்துக் கொண்டாளோ, தங்கச்சி, இவங்களே உனக்கு நெனப்பு இருக்குதா என்ன?” என்று கேட்டாள் கிழவி.

ஒ, தெரியுமே, இவங்களே! கம்ம மருதமுத்து அண் சைசியின் உசிருகுே உசிராச்சே இந்த மச்சான்’ என்று சொல்லிவிட்டு, அவள் கண்ணுேட்டத்தைக் கீழே தாழ்த்திக் கொண்டாள்.

மலர் என்றால் அதன் மணம் அத்துடன் இரண்டறக் கலந்துதானே இருக்கும்? அப்படித்தான் பூவம்மாவின் இளம் மனசில் அந்தப் பழைய சம்பவங்கள் ஒன்றிவிட்டிருந் தன.

அப்பொழுது பூவம்மா பருவத்தின் எல்லேக்கோட்டில் தழைத்து கின் ருள்."பூவோ, பூவு’ என்று அவள் தெருவோடு பூ விற்றுக் கொண்டு செல்லும்போது பூவின் மணத்தோடு அவள் குரலின் இனிமையும் சேர்ந்து கொள்ளும். அவள் பூச்சரம் தொடுத்துத் தந்து காதலில் வெற்றி கண்ட பூவை ப்ர்கள் பலர் உண்டு; அவள் கையில் வாங்கிய பூவைக் குழந்தைகளுக்குச் சூட்டிப் பெருகி வாழ்ந்த குடும்பங்கள் எத்தனையோ? அக்கம் பக்கத்திலுள்ள பூவத்தகுடி கவராத் திரி, ககரம் பங்குனி உத்தரம், சிலட் டுர் மாரியம்மன் திரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/109&oldid=684269" இலிருந்து மீள்விக்கப்பட்டது