பக்கம்:வேனில் விழா.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () வேனில் விழா

சாரங்கராஜன் ஏப்பம் பறித்தான்!

தாய் மனம் விட்டுச் சிரித்தவாறு, மகனுடைய சுருள் முடியைக் கோதிவிட்டாள். கைகழுவ நீர்ச்செம்பை அவ னிடம் நீட்டினுள்.

பெற்றவளின் பாசம் அவனுக்குத் துணிவை ஈந்தது. கால்வாயைத் தாண்டத் தெரியாதவன், வெட்கம் எனும் கடலத் தாண்டினன். இதற்கு, உண்மை மிகுந்த ஒன்று இருந்தது. அதுதான், திலகவதியின் எழில்பூத்த திருமுகம். எண்ணியவன் திரும்பத் திரும்ப எண்ணினன். கனவு கூட்டும் கண்கள்; கனவுகாணச் செய்யும் வல்லமை கொண்டிலங்கின. அவை. இன்பக் கதைகள் சொல்ல வல்ல இதழ்கள். சுண்டினுல், ரத்தம் தெறிக்கும் சிவப்புத் தோல். போதையூட்டிப் போதம் ஊட்டும் கவர்ச்சி! பண்பு சேர்த்துப் பண்பை உருவாக்கும் பதுமை! .”

“கனவுலகப் பயணம் முடிந்ததோ?”

திலகவதியின் நிழற்படத்தை முதலில் தன் அன்ன யிடம் நீட்டினுன் சாரங்கராஜன். அந்தப் பாவனையிலே, அவள் தன் மகனின் உள்ளப்பாங்கின் பாவனையை எடை போட்டாள். இனம்கண்டாள் போலும் படத்தில் பாவையின் ஒளிவிழிகள் ஒளிகாட்டி யிருக்கவேண்டும்!:தாய் சிரித்தாள். அந்தப் பாசச் சிரிப்பு மைந்தனின் இதழ்க் கண்ணுடித் துண்டங்களில் பிரதிபலித்தது.

பிரஹதீஸ்வரர் ஆலய மணி ஒலித்தது

“சாரங்கன்...!! -

பெண் எந்த ஊராம்:

சொந்த ஊர்திருச்சியாம். இப்போது பூட்டணத்திலே இருக்கிருள். என்ளுேடு ஒன்றாகப் படித்தவள். அம்மா!”

இன்னபடி சொல்லவேண்டுமென்று திட்டம் இட்டு .: ‘: AAASSSS00S SSS S eS eSeS 2: அதன்ப்டி பேசிளுன் அவன். வார்த்தைகள் பிசிறு தட்ட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/11&oldid=684270" இலிருந்து மீள்விக்கப்பட்டது