பக்கம்:வேனில் விழா.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 109

விழா முதலியவற்றில் எல்லாம் அவள் பூக்களின் மணம் தான் தலைமை வகிக்கும் என்றால் பின் கேட்பானேன்?

ஒருநாள், ‘தங்கச்சி, இன்றைக்கு இரவு கோவலன் நாடகம் கடக்குது. என்ைேட இன்னொரு ஆளுக்கும் சேர்த்துச் சோருக்கச் சொல்லு ஆயாகிட்டே” என்றான் மருத்முத்து. பூவம்மாவுக்கு அந்த் இன்ைெரு ஆள்’ யாரென்று துப்புத் துலங்கவில்லை. மெள்ளக் கள்ள விழிப் பார்வையை கடைக்குள் தூது விட்டாள். வாட்ட சாட்ட மான இளம் வயசு ஆண் பிள்ளை. அவன் பூபாலன்.

கையெழுத்து மறைந்த சுருக்கில் தமையனுக்கும் பூபாலனுக்கும் உணவு படைத்தாள். தானும் உண்டாள். எல்லோருமாக நாடகத்துக்கு வண்டி கட்டிக்கொண்டு புறப் பட்டார்கள். வழியெல்லாம் மச்சான்’ பாட்டுப்பாடி பூபால னைக் கலாட்டா செய்தான் மருதமுத்து. ஆனல் அக்த மச்சான் தன்னக் கணத்துக்குக் கணம் விழுங்கிவிடுவதைப் போலப் பார்த்துத் தீர்த்த விஷமத்தை மட்டும் பூவம்மா ஒரு காலும் மறக்கவே மாட்டாள். நாடகம் பார்த்தபோதுதான் தன் அண்ணன் ராஜபார்ட்’ வேஷம் போட்டிருப்பது தெரிக் தது. மாதவியாக வேஷம் போட்ட பெண்ணே மாத்திரம் பூவம்மாவால் ஏனே மறக்கக்கூடவில்லை.

நாடகம் முடிந்து வீடு திரும்புகையில், ‘கோவலன்’ நாடகத்தைப்பற்றிய அபிப்பிராய பரிவர்த்தனே நடந்த சமயம், மாதவியாக வந்த பெண்ணுக்குத்தான் முதல் பரிசு தந்தாள் பூவம்மா

‘பூவம்மா, சபாஷ்! அப்படிச் சொல்லு. மாதவிதானுக் கும் உனக்கு ரொம்பப் பிடிச்சது ? நம்ம பூபாலன் மச்சான் அப்படின் னு யோகசாலிதான். மாதவி வேசம் போட்டது பொண்ணு இல்லே, அது கம்ப மச்சான்தான்’ என்றான் மருதமுத்து.

‘கெசமாவா ? நம்ப மச்சானு அசல் மாதவி மாதிரியே நடிச்சாங்க? அதிசயமாத்தான் இருக்குது!” என்று சொல்லி வியப்புமேலிட கின்றாள் பூவம்மா. முன் பின் பரிச்சயமில்லாத

ஒரு ஜோடி ஆண் பிள்ளையிடம் வலியப் பேச்சுக் கொடுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/110&oldid=684271" இலிருந்து மீள்விக்கப்பட்டது