பக்கம்:வேனில் விழா.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ஆவணத்தாங் கோட்டைச் சால்ை

ததில் காணித் தலைகுனிந்து போனுள் பூவை. பூப்போலப் புன்னகைத்த வண்ணம். அன்று பிறந்தது பூவம்மாபூபாலன் அறிமுகம். பூபாலன் பூவம்மாவின் இதயத்தில் கிரந்தரமாக இடம் பெற்றுவிட்டான்.

பேச்சு மூச்சுக் காட்டாமல் ஒருநாள் மருதமுத்தவும் பூபாலனும் இலங்கைச் சீமையை நாடிப் புறப்பட்டார்கள். அப்பொழுது மருதமுத்து தன் தங்கையிடம், ‘தங்கச்சி, அக்கரைச் சீமையிலே யிருந்து திரும்பினதும் உன்னை கம்ப பூபாலன் மச்சான் கிட்டே பரிசம் போட்டுக் கண்ணுலம் கட்டிக் கொடுத்துடுறேன். அப்பாலேதான் என கனணு லம்...” என்று கூறி விடை பெற்றுக்கொண்டான். தமைய னின் அவ்வார்த்தைகளே அவள் எங்ஙனம் மறப்பாள் ? மறக்கக்கூடிய வார்த்தைகளா அலை ? அப்பொழுது விஷமப் புன்னகையினுல் தன்னைப் பரிகாசம் பண்ணிய அவளது ஆசை மச்சானின் நினைவு முகத்தைத்தான் அவளால் மறக்கமுடியுமா? அது மறக்கக்கூடிய முகம் அல்லவே!

பூவம்மா!’ என்று பூபாலன் அழைத்ததும் அவள் மனம் திடுக்கிட்டுப் பழைய கினேவுகளிலிருந்து மீண்டது.
பூவம்மா, இந்தச் சாமான் எல்லாத்தையும் பத்திரமா உள்ளே எடுத்துவை. இந்தப் பணம் ஐந்நூறையும் மச்சான் மருதமுத்து உங்கிட்டே தரச் சொன்னன். இப்பவே உன் ஆயாகிட்டே பணத்தைக் கொடுத்துப் பத்திரமாக வைக்கச் சொல்லு. நான் போயிட்டு வர வெள்ளிக்கிளமை வாக்கிலே இங்கே வாரேன்...” என்றான் பூபாலன் ; உதட்டில் இழை யோடியது இள நகைக் கீறலொன்று; அவன் முகத்தில் ஆனந்தக் கனவொன்று தவம் பண்ணிக்கொண்டிருந்தது.

“கல்லாயிருக்குதுங்களே. விருந்தாளியாக வந்தவங்க கை கணக்காம போகலாமா? கொடியிலே ஆயா சமைச்சு விடுவாள். சாப்பிட்டுவிட்டுத்தான் போகனும், மச்சான்’ என்றாள் பூவம்மா குதுர்கலம் ஏற்றம் புரிந்த குயில் குரலில். அவள் வேண்டுதலில் உரிமை தொனித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/111&oldid=684272" இலிருந்து மீள்விக்கப்பட்டது