பக்கம்:வேனில் விழா.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் I 11

இன் பச் சூழ்நிலையில் நாட்கள் காற்றாய்ப் பறந்தோடக் கேட்கவா வேண்டும்? பூபாலன்-பூவம்மா ஜோடிக்கு அப்பொழுது தாங்கள் இந்திரலோகத்தில் வா ழ்வதாகவே பட்டது.

சூரியன் உதயம் ஆவதற்குமுன்பே எழுந்து அவன் பூஞ்செடிகளுக்கு ஏற்றத்தில் தண்ணிர் இறைப்பான் ; அவள் பாத்தி கட்டித் தண்ணிரைச் செடிகளுக்குப் பாய விடுவாள். களத்துமேட்டில் கதிரடிப்பான் அவன் ; மாடு கட்டிப் போரடிப்பாள் அவள், கும்பல் சேர்ந்த கெல்மணிகள் குன்றுகளாகிக் கிடக்கும் ; காதலர்கள் மெய்ம்மறந்து போவார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொன்மணி அல்லவா ? எந்த வேலையிலும் பூபாலன் வில்லாதி வில்லன் ; அவள்-பூவம்மா அவனுக்குப் பக்கபலம், உயிர்ததுணே. கிலா என்றால் அவர்களுக்கு கிலாச்சோறு உண்பதுபோலே. இலங்கைச் சீமையில் நூரெலியா, கந்தப்பாளே முதலிய பகுதித் தேயிலைத் தோட்டங்களில் தானும் மருதமுத்துவும் உழைத்து வாழ்ந்த வாழ்வைப்பற்றிக் கதை கதையாகச் சொல்லுவான் அவன். அவள் திறந்த விழி மூடாமல் ஆசை யாகக் கேட்டுக்கொண்டிருப்பாள்.

“பூவம்மா, கம்ம கல்யாணத்தைப்பத்தி யோசனை

செஞ்சியா?”

“மச்சான், கிணத்துத் தண்ணியை வெள்ளமா கொண்டு போயிடும் ? என் அண்ணுச்சி அக்கரைச் சீமை யிலேருந்து வந்த கையோட நம்ப கண்ணுலத்தை முடிச்சுக் கலாம். ஊட்டி வளர்த்து என்னை உருவாக்கின அண்ணுச்சி இல்லாம கான் கண்ணுலம் கட்டிக்க ஒப்பல்லே. பொறுத்தது பொறுத்துப்புட்டோம். அடுத்த மாசந்தான் அண்ணுச்சி வந்துடுமே. நம்ப கண்ணுலம் முடிஞ்சாத்தான் அண்ணுச் சிக்கு நல்ல மூச்சு தலைகாட்டும். ஆயாளுக்கும் அதுதான்


கெனப்பு. ஏன் மச்சான், சரிங்களா!...” என்றாள்

பூவம்மா.

பூவம்மா, உன் அண்ணுச்சிக்கு அங்கே ஏதோ

தலைக்குமேலே அவசர ஜோலியாம். சொன்ன கெடுவுக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/112&oldid=684273" இலிருந்து மீள்விக்கப்பட்டது