பக்கம்:வேனில் விழா.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 + 2 ஆவணத்தாங் கோட்டைச் சாலே

தோட்டத்திலே கங்காணி லீவு தரமாட்டேனுட்டாராம். இதோ பாரு கடுதாசியை ...” என்று சொல்லி அவளிடம் கடிதத்தைக் கொடுத்தான் பூபாலன்.

அவள் படித்தாள் .

‘அன்புள்ள தங்கச்சிக்கு,

கான் மச்சான் மூலம் சேதி சொல்லி அனுப்பின பிரகாரம் புறப்பட முடியவில்லை. லீவு கிடைக்காது போய்விட்டது. பூபாலன் மச்சானும் இங்கு புறப்பட வேணும். அதற்குள் மச்சானுக்கும் உனக்கும் கல்யா ணம் கடந்து முடிந்தால் சிலாக்கியம். மச்சானுக்கும் எழுதியிருக்கிறேன். நான் இல்லையென் ருல் என்ன, இனி உனக்கு மச்சான் தானே சகலமும் ! உங்கள் திருமணம் சிறப்பாக நடக்க நம் குலதெய்வம் காளி

யம்மனிடம் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன்.

மருதமுத்து.” “இப்ப நீ என்ன சொல்லுறே, பூவம்மா ?”

“மச்சான், நான் உங்ககிட்ட கொண்டிருக்கிற ஆசைக் கும் நேசத்துக்கும் கம்ப தெய்வந்தான் சாட்சி. ஆனல், உடன் பிறந்த என் அண்ணுச்சி இல்லாம் கான் கண்ணுலம் கட்டிக்கிறதுக்கு லவலேசமும் சம்மதிக்க ஏலாது. ஒரு யோசனை ஓடுது மனசிலே. நீங்க இந்தத் தடவை அக் கரைக்குப்போய்ச் சேம்மாத் திரும்புங்க அண்ணுச்சியோட. கொடியிலே நம்ப கண்ணுலம் முடிஞ்சிடும். ஆமாங்க, அது தான் தேவலாம்’ என்றாள் பூவம்மா. கிழவியும் மகளுக்கு அனுசரணையாக ஆமாம் போட்டாள்.

‘பூவம்மா’’ என்று ஆரம்பித்த பூபாலன் பேச்சை மேலே தொடர முடியாமல் திணறிஞன். மறுகணம் கண் சளில் நீர் வடிய அவன் கின்ற காட்சி அவளே மெய் சிலிர்க்கச் செய்தத. -

மச்சான்’

to :

4 a : a + 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/113&oldid=684274" இலிருந்து மீள்விக்கப்பட்டது